Pages - Menu

Friday 29 May 2020

காசி யாத்திரை 2

ஒரு டூரில் நம்ம சொந்தபந்தம் அண்ணன் அண்ணி சம்மந்தி நட்பு என்று உறவினரோடு அளவளாவிய 20 நபர் பயணத்தில் மற்ற சில முகம் தெரியாதவர் பயணத்தில்  பயம் தரும் சில பயணமும் உள்ளது. 

 என்னுடைய இந்தகாசி யாத்திரை வயதான பெரியவர்களை தொலைதூர பயணத்தில் பணம் மட்டுமே போதாது. குடும்ப உறுப்பினரோடு பயணிக்க முயற்சி செய்வது நல்லது. பிறர் பயணத்ததிற்கு தொந்தரவு தரக் கூடாது.

முதல் நாள் காலை ஏழுமணிக்கு எக்மோரில் இரயில் ஏறி இனிதே சென்றது. 

ஆனால்.....

வருத்தமான இரண்டாவது நாள் காசி பயணமே மறந்தாலும் என் ஆயுள் உள்ள வரை மறக்க முடியாத சில நிமிடம்..

ஆம் ஒரு வயதான பாட்டி மூன்று முறை காசிக்கு வந்தேன் இப்போது என் தோழி மூன்றாவது வீட்டில் இருக்கிறார் என்று அழைத்து வந்தார்.. 

நான் என் அம்மாவிற்கு போன் பேச பக்கத்து இருக்கையில் வந்து போனில் பேசிய போது அந்த பாட்டி பற்றிதோழி பாட்டி சொன்னது.. அவருக்கு காலை முதல் மிகவும் மயக்கமாக படுத்தே இருந்தார். மிகவும் சோர்ந்த நிலையில் பாதி இட்லி சாப்பிட்டதாகவும் லோ சுகர் மாத்திரை போட்டார். சிறுநீர் பத்துமுறைக்கு மேல போனார் பதினோறாவது முறை போகும் போது எழுந்து நடக்க முடியல நானே கைதாங்கலாக அழைத்து வந்து படுக்க வைத்தேன் என்று சொன்ன போதே முடியாத படுத்திருந்த அந்த பாட்டியின் தீர்க்கமான பார்வை என்னை ஏதோ செய்தது.  (அப்போது தெரியவில்லை நானே அவருக்கு .. )டூர் ஏஜன்ட் அழைத்து சொல்லி மருத்துவரை அழைக்க சொல்லிருந்தோம் இரயிலில் எந்த மருத்துவரும் இல்லை மொல்ஸ்ராய் போனாலே மருத்துவர் வருவார் ஆம்லன்ஸ்ல அழைத்து போகலாம் என்றனர்..

அருகே ஒரு நர்ஸ் சற்று சக்கரை தண்ணி தாங்க என்றனர். நானும் என் கணவரும் இரண்டூ மூன்று பெட்டி தேடி ஐம்பது மில்லி தண்ணில 2ஸ்பூண் சக்கரை கலந்து இரண்டு முனறு நானே தந்தேன் எல்லாருமே அருகே செல்ல பயந்தனர்.. என் தோழி அக்குபஞ்சர் பிராணிக் ஈலர் அவரிடம் போனில் கேட்டேன் என்ன செய்ய என்று அவரும் லோ சுகர் என்றால் மாம்பழ ஜீஸ் தரலாம் என்றார் அவசர பாய்ன்ட் அக்குபிரஷைர் தர போட்டோ தந்தார் இவைகளை பேசிட்டு வரும் முன்னே அந்த பாட்டி ஒரே ஒரு மிடர் சக்கரை தண்ணி நான் ஊற்றும் போதே தலை திரும்பியது.. என்னையும் அந்த பக்கம் போங்க மருத்துவர் வரட்டும் என்று அனுப்பிட்டார் தோழியின் பாட்டி .. பிறகு நான்கு மணிநேரம் கழித்து மொகல்ஸ்ராய் வந்ததும் மருத்துவர் வந்து அந்த பாட்டி இறந்து பல மணிநேரம் ஆகிடுச்சி என்றதும் தூக்கி வாரிப்போட்டது நெஞ்சடைத்து போனது.. 

அந்த பாட்டி மகனுக்கு சொல்லி அந்த இரயில் நிலையத்திலே அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்து போஸ்மாடம் செய்யாமல் எல்லா உதவியும் ஒரு பீகார் இந்திகார தம்பி ஏற்பாடு செய்துஇப்போது வரை போனில்  தொடர்ப்பு கொண்டார் நலமாகா என்று அந்த பாட்டியின் மகனோ தாயின் உடலை வீடியோ எடுக்க சொல்லி இதை வீடீயோ எடுப்பது எத்தனை மன வலியோடு என் கணவர் எடுத்து அனுப்பி இறைவா நம்ம எதிரிக்கும் இது போல வர வேண்டாம்... இன்னும் தொடரும்..#காசியாத்திரை2

2 comments: