Showing posts with label சசியின் ஆன்மீக தேடல். Show all posts
Showing posts with label சசியின் ஆன்மீக தேடல். Show all posts

Monday, 18 May 2020

பர்வதமலை

அதிசயத்தின் அடிப்படையில், இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.
அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில்
வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர
ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள்
தோன்றுவதைக்காணலாம்

பர்வதமலை::

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து
தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை
என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி
வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு
சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய
பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து
சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

சிறப்புகள்:::

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த
பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது
விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள
செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட
அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து
வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின்
கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன்
அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து
பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.
மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக்
காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள்
இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக
நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்
வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில்
உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி
ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ
சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த
மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்
என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு.   26 கி.மீ.,
சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால்
கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று
இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி
வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து
கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும்
காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு
விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு
முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள
சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

Saturday, 16 May 2020

உன் திருவிளையாடலை நான் அறியேனே

சந்தேகக்  குறி

பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை பற்றியவையே.   பாகவதம் அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. பகவத் கீதை அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது.  கீதை அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.

கீதையை  ஏதேனும் அரை அத்தியாயம் ஒரு நாள்  படித்தாலே போதும்,   துயரம்,  துன்பம், தீமைகள்  விலகும்.  ஒரு சின்ன கதையோடு  இன்றைய கட்டுரை முடியட்டும்.

ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும்  கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம்   கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம்.  

வழக்கம் போல் அன்று  கீதையைப்  பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது.   திடீரென்று   இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவ்வளவு பேரையும்  கிருஷ்ணன் எப்படி நான்  ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே  ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து  நேரில்  சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா? 

எல்லோரின் கஷ்டத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்?. அவர்களை  சோகத்திலிருந்து, துன்பத்திலிருந்து எவ்விதம்  விடுவிப்பான்?  உலகில் எங்கும் அங்கங்கே அவன் நியமிக்கும் வேறு யார் மூலமாகவோ ஒரு வேளை நிவர்த்திப்பானோ? நான் பாதுகாக்கிறேன் என்றால் அது தான் அர்த்தமா?  

திரும்பி திரும்பி படித்தும்  அவனுக்கு  இது  விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று புரிந்து கொள்ளவேண்டும்  என்று தீர்மானித்து  சிகப்பு வர்ணத்தில் ஒரு   x  அந்த  அந்த அத்தியாயத்தில் ஸ்லோகத்தின் மேல் குறி வைத்தான். புத்தகத்தை மூடினான்.  சொம்பை ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல  உஞ்ச விருத்திக்கு சென்றுவிட்டான்.

அந்த ஏழை பிராமணனின் போறாத காலமோ, துரதிர்ஷ்டமோ   அன்றைக்கு பார்த்து ஒருவீட்டிலும் யாரும்  அவனுக்கு தானியங்கள் பிக்ஷை  அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

பிராமணன் வழக்கமான தெருக்களில் அலைந்துகொண்டிருந்த சமயம் யாரோ ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத்  தட்டினான்.  பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது. அழகான  அந்த சிறுவன்  தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வீட்டில் வைத்தான்.

யார் அப்பா நீ ? என்ன இதெல்லாம்?  அட்ரஸ் தப்பா  இங்கே வந்து விட்டாய் போல இருக்கிறது?

''இல்லேம்மா, நான் இங்கே  இருக்கிறவன்  தான். இது என் குருநாதர் வீடு.  அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு  தேவைப்பட்ட  சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''

மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய்  எல்லாமே இருந்தது.  தாராளமாக  மூன்று மாதத்திற்கு அவர்கள்  ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை.

''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா.  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''

அம்மா ஒருவேளை உங்களுக்கு   நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது.  குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை சுமந்து  மெதுவாக நகர்கிறேன் என்று  என் மேல் இடது பக்கமும் வலது பக்கமும்  பலமாக  முதுகில் அடித்திருக்கிறார். 

என் முதுகில் பாருங்கள் தெரியும்.  குரு பத்னி அவன் அழகிய முதுகில் பார்த்தாள் .   X  என்று  சிவப்பாக  அவள் கணவன்   அடித்ததின்   அடையாளம்.   அவள் திகைத்தாள்.  ஏன்  என் கணவர் இவ்வாறு இந்த சிறுவனிடம்  அவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவரா என் கணவர்?  பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கிறாரே!  .  

''என் குழந்தை நீ இங்கே வாடா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து  முதுகைத் தடவி, தேங்காய் எண்ணெய் தடவி, அவனுக்கு  உணவளித்தாள்.   அவர் வரும் வரை ஓய்வெடு என்றதும் அவன் பூஜை அறையில் போய்  படுப்பதாக  சொல்லி உள்ளே சென்றான்.

ரொம்ப நேரம் கழித்து களைப்பாக  எங்கும்  அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர்  விசனத்தோடும் வெறும் கையோடும்  வீடு திரும்பினார்.  

அவர்  தலையைக் கண்டவுடன் முதல் கேள்வியாக அவரை  எதுவும் பேச விடாமல்  சரமாரியாக  அவள்  அந்த அழகிய சிறுவன்,  சிஷ்யனா,  அவர் எப்போது அவனிடம்   சாமான்கள் கேட்டு கொண்டு வர சொன்னார் . அவன்  சாமான்களை தூக்க முடியாமல்  தூக்கி வந்தது. அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் பிரம்பால்  குறுக்கும் நெடுக்குமாக   அவர்  அடித்த சிவந்த அடையாளம்  எல்லாம் சொல்லி ஏன் அவனை அடித்தீர்கள் என்று காரணம் கேட்டாள் .

பிராமணருக்கு தலை சுற்றியது.

''எனக்கு சிஷ்யனா?  நான் சாமான் கேட்டேனா?  அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா?  என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.

''நீங்கள் அடித்தீர்கள் என்று முதுகை காட்டினானே   X  என்று சிவப்பாக அடையாளம் இருந்ததே. சின்ன குழந்தை அவன் பொய் சொல்லவில்லை. நான் முதுகில் தேங்காய் எண்ணெய் தடவினேன். என்  கண்களில் நீர் பெருகியதே. ''

 ''இல்லை என்  கிருஷ்ணன்  சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை'' என்கிறார்.

''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '.  ஓடினார்.  வீடு முழுதும் தேடினார்.  அவனைக் காணோம்.

பிராமணருக்கு   புரிந்துவிட்டது. வந்தது  கிருஷ்ணன் தான்.  வீட்டில் நிறைய  சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே.  இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து  மறுபடியும்  பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார்.  காலையில்  அவர் சந்தேகத்தோடு  போட்ட X  குறியைக் காணோம். யார் அழித்தது?  

''கிருஷ்ணா,   கோடானு கோடி மக்களின் துயர், சோகம் தீர நான் அருகிலே  இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று சந்தேகப்பட்டேனே.  என் வறுமைத் துயர் தீர்க்க நீ என் வீட்டிற்குள்  வந்தாய், வறுமையை போக்க  உணவளிக்க  மளிகை சாமான்களை நிரப்பினாய். உன் காருண்யம் புரிந்தது. உன்னால் முடியும் என்று புரிய   வைத்தாய். 

அதற்கு  அடையாளமாக நான் போட்ட சந்தேக குறியை முதுகில் தாங்கி  என் மனைவிக்கு தரிசனம் தந்தாய். அவள் செய்த  புண்யம், அதிர்ஷ்டம் கூட  செய்யாத பாவி நான் உன்னை சந்தேகப்பட்டேன்''.  

ஆம்  கீதையும் கண்ணனும் ஒன்றே.  கீதையை இது எப்படி என்று சந்தேகக்கப்பட்டு  அழுத்தி X  கோடு போட்டேன்,  கீதை நீ என்று அறியாத மூடன், அதை உன் மேல் சந்தேகப்பட்டதாக காட்டி முதுகில் வடுவோடு , காயத்தோடு என் மனைவிக்கு காட்டி எனக்கு கண் திறந்தாய். கிருஷ்ணா  என்னை மன்னித்துவிடு''.

எவன் அவனவனுக்கு நியமிக்கப்பட்ட தர்மங்களை, சாஸ்திரங்களை பின்பற்றாமல்  மிருக வாழ்க்கை நடத்துகிறானோ, அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது. 

இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு  கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்  !

Sunday, 10 May 2020

இரமணரும் அவர் தாயாரும்

பெற்ற  அன்னைக்கு    மோட்சம்   அளித்த  மகன்

          அன்னை    அழகம்மை   தன் மகன்  ரமணருடன்    கடைசிக் காலத்தில்   சுமார்   ஆறு
வருடங்கள்   தங்கியிருந்தார் . தன்  மகன்  மடியிலே
உயிர்  விடவேண்டும்   என்ற   ஆசைப்பட்டாள் .
பகவானை   விட்டு   வெளியில்  எங்காவது   சென்று   அங்கேயே   உயிர்   பிரிந்து விடுமோ
என்று   அச்சம்   அடைந்தாள் . அதனால்  மகனை
விட்டு   எங்கும்   செல்வது   இல்லை .

              1922  மே  மாதம்   அழகம்மையாரின்  உடல்
நிலைமை   கவலைக்கிடமானது . பகவான்  தன்
தாயின்   அருகிலேயே  அமர்ந்திருந்தார். அப்போது
தனது   வலது  கரத்தை   அன்னையின்   வலது
புறத்தில்   ஆன்மீக ஹ்ருதய   ஸ்தானத்தின்  மேலும்   இடது   கரத்தை   உச்சந்தலையின்   மீதும்
வைத்திருந்தார் .  அதாவது  அவள்   மூச்சு வாங்க  ஆரம்பித்த   முதல்   பிராணன்   போய்   சில வினாடிகள்   ஆகும் வரை    காலை  எட்டு  மணி
முதல்   இரவு   எட்டு மணி  வரை   தன்  தாயை
விட்டு  அகலாமல்   கைகளையும்   எடுக்காமல்
அமர்ந்திருந்தார் .  அச்சமயம்   பக்தர்கள்
அருணாசல  அட்சரமணமாலை   பாராயணம்
செய்தனர் .

   திரண்டு   எழும்பிய  கடந்த  பல   ஜென்மங்களின்  பூர்வ  வாசனைகள்   வெளியே   செல்லாமல்   ஆன்ம  ஹிருதயத்தில்  அடங்கி   ஒடுங்குவதற்காகத்தான்   இப்படி  கையை  வைத்திருந்தார் .  எண்ணங்கள்   உதித்த  இடத்தில்
ஒடுங்கினால்தான்   முக்தி .  தாயின்   ஜென்ம
வாசனைகள்  மகனால்  அழிக்கப்பட்டு விட்டது .
மஹா சாந்தத்தில்   மஹாசமாதி  பெற்றுவிட்டது .

     அம்மாவின்   மூச்சு   அடங்கியபின்  அவளுடைய
முகம்   ஒரு   தெய்வீக   ஒளியுடன்  பிரகாசித்தது .
உயிரற்ற பிணம்   போலில்லாமல்  தியானத்தில்
இருக்கும்  யோகினியைப்  போல்  விளங்கியது .
அவள்   மரணமடைந்த   வினாடியில்  உலோகத்தை
போன்ற   ஒரு  சப்தம்   கேட்டது .

         தீட்டு    ஒன்றும்   இல்லை ,  அனைவரும்
சாப்பிடலாம்   என்றார் .  பின்   பக்தர்கள்
அனைவருடன்   பகவானும்   உணவருந்தினார் .

         ஞானத்தில்   ஆண் ,  பெண்  பேதமில்லை .
பின்னர்     அன்னைக்கு   சமாதி   வைப்பது
என்று   முடிவு செய்யப்பட்டது .