Showing posts with label சசியின் கவிதைகள். Show all posts
Showing posts with label சசியின் கவிதைகள். Show all posts

Saturday, 16 December 2017

பட்டாம்பூச்சி



பசுமைக் குடிலோடு
வண்ணங்ளை குழைத்து
வார்த்த பட்டு வண்ண 
பூச்சியே
மெட்டு சொல்லியே பாடும்
மனம் நினை காணும் போதெல்லாம் 
புதிய சிறகு முளைத்து 
சிறகடித்தே பறக்கிறது

Wednesday, 22 July 2015

சுவாசம்



என் சுவாசக் காற்றின் நாதமே கீதமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல நீ அருகிலுள்ள போதே நேசித்தும் வாசித்தும் கொள்கிறேன்..

மகிழ்வு

மகிழ்வான தருணம் ஒவ்வொரு நொடிகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமிக்கிறேன் ..

வரம்

வாழ்க்கையெனும் வானத்திலிருந்து இன்பமெனும் மழைதுளியை என்றென்றும் என் கைகளில்

 ஏந்துகிறேன் 

தூரம்

வெற்றியின் விளிம்பில்
ஆனந்த களிப்பில் 
ஏதும் அறியா 
பேதையாக 
திரும்ப பார்க்கிறேன். 
கடந்த தூரத்தை விட 
இழந்த மகிழ்வுகள் 
எண்ணிலடங்காதவை..

காதல்

காதலால் 
காலத்தையும் 
கடக்கலாம்....
 
காதலில்லாமல்
கன நேரத்தையும்
 கடந்து போக முடியல ...

ஏக்கம்

சோதித்துக் கொண்டே
 இருக்கிறாய் என் 
சந்தோஷங்களை..

தோஷம் கழித்த கன்னிப்
பெண்ணின் ஏக்கம்..

மெய்

உண்மை 
ஊமையாகவும் 
பொய் தேனாகவும்
 இனிக்கும் சில நேரம்...

மழை

மெல்ல மெல்ல ஆதவனின்
கதிர்களை முத்தமிட்ட 
மேகங்கள் தன்நிலை 
மறந்ததோ 
மழையாக மண்ணையும்
 முத்தமிட துடிக்கிறது
 இதோ இதோ முத்தமிட்டு 
கொண்டே என்னைப் 
பார்த்து புன்னகைக்கிறதே
 நீயும் வா விளையாட
 என்றே கரம் தந்தது

Monday, 30 March 2015

கடமை

தென்றலாக வந்து புன்னகை 
மலர்களை பரிசாக தந்து 
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

கடமை

தென்றலாக வந்து புன்னகை
 மலர்களை பரிசாக தந்து
 புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

துணிவு

எப்போதும் எதுக்காகவும்
சோக போர்வைக்குள்
 நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
 துக்கமோ கவலையோ
 மீண்டுவரா துயரில் புகுத்திவுடும்

நீர் குமிழ்

தோல்விகள் நீர்க் குமிழாக
வெற்றிகள் கையில் கடிகாரமாக .....
சுழன்றுகொண்டே .

வெற்றாக நான்

வரிகளற்று 
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்

மடல்

வரையா மடலில்
ஏங்கி நிற்கிறது...
உனக்கான அன்பு 
வரிகளும் அதன் சுவாசமும்

சிவனே

நான் (அகந்தை )இதை 
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது 
பேதையாகி நின்
 பாத கமலங்களை 
பற்றி சரணாகதி 
அடைகிறேன் தில்லை நாதனே.

தென்றல்

மயிலிறகான
மனதை வருட 
தென்றல் வருவதில்லை ..
துன்பமே துன்புறுத்துகின்றன.

கனவுகள்

இந்த வாரம் பாக்யா புக்ல வெளிவந்த என் கவிதை

Saturday, 28 February 2015

அன்னை

கண்ணே!
 மணியே!
கட்டி கரும்பே!
மானே !தேனே!
மரகதமே !
மரிக்கொழுந்தே !
மலர்செண்டே!
வையகம் போன்ற
வந்த என் குல விளக்கே
இன்னல் போக்க வந்த
இன்னிசையே
என வர்னித்து பாடுகிறாள்
ஒரு அன்னை
தன் மகன் இறந்ததை
அறியாமல் தூளியை
ஆட்டிக்கொண்டே



சிவமே

எண்ணிலடங்கா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
என் சித்தம் உன்னைச் சுமந்தே
பித்தாகி போனதடா
பிறைசூடனே