Saturday, 28 February 2015

சிவனே

பட்டமாக பறக்கிறேன்... 
இருளும் விடியலும் பாராமல் 
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து 
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....

அனுபவம்

தோல்விகள் அனுபவ 
பெட்டகமாக
வெற்றியின் ஆணி
வேராராக வளர்கிறதே
மனதில் வைராக்கிய விழுதுகளாக...

சிவனே

எங்கெங்குமே நின்னையே
 காண்கிறேனடா சர்வேசா...
 வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ 
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே 

அடங்கிவிடும் பாழாய்
 போகும் இந்த பிறவப்
 பயனாக நின்பொற்பாதம்
 தொழுகிறேன் 
திஅருணாசலனே 
அடைக்கலம் தாராயோ.!!!

உன்னை அறிந்தால்

தேடிக் கொண்டே இருக்கிறேன் ....நீ 
அருகில் இருப்பதை உணராமலே..

சிவனே

நினைத்தவைகளையும் 
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு 
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத 
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்