Friday, 24 April 2020

கோபத்தை வெல்வோமா

கோபத்தை அடக்க சுலபமான வழிகள்...*
எதையும் திகட்ட திகட்ட ரசியுங்கள்
1. பொருட்படுத்தாதீர்கள்..

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான்.

எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது.

அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.

பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர்.

கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன.

அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர்.

மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.


நம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுகிற ஒரு பொருள் தக்காளி.மூன்று வேலை உணவிலும் ஏதோ ஒரு வகையில் தக்காளி இடம்பெற்றுவிடும்.விலையில் நம்மை அவ்வப்போது பயமுறுத்தினாலும் எக்கச்சக்கமான பலன்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது தக்காளி.

Thursday, 23 April 2020

எங்கள் ஊர் திருவண்ணாமலை

எங்கள் ஊர் #திருவண்ணாமலை #அண்ணாமலையார் கோவிலை பற்றி சில தகவல்கள்.. 

வானுயர 9 கோபுரங்கள், 2 குளங்களுடன் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் உலகின் #8வது மிகப்பெரிய இந்து ஆலயம் ஆகும்.

1987 வரை திருவண்ணாமலை ராஜ கோபுரம் உலகின் மிக உயரமான கோபுரமாக திகழ்ந்தது. ( தற்போது முதல் மூன்று இடத்தில் உள்ள உலகின் மிகச் உயரமான கோபுரங்கள் முறையே
1. #திருவரங்கம் ராஜ கோபுரம் - 239 அடி (கட்டப்பட்ட ஆண்டு 1987)
2. #முருடேஸ்வர், கர்நாடகம் - 237 அடி (கட்டப்பட்ட ஆண்டு 2008)
3. #திருவண்ணாமலை ராஜ கோபுரம் - 217 அடி  (கட்டப்பட்ட ஆண்டு 9 ஆம் நூற்றாண்டு)

உலகின் முதல் 15 உயரமான கோபுரங்கள் பட்டியலில் திருவண்ணாமலை கோவிலில் உள்ள 4 கோபுரங்களும் அடங்கும். உலகில் வேறு எந்த கோவிலிக்கும் இச்சிறப்பு இல்லை

1. #ராஜ_கோபுரம் (கிழக்கு - 217 அடி) உலகின் 3வது பெரிய கோபுரம்
2. #அம்மணி_அம்மன்_கோபுரம் (தெற்கு - 171 அடி) உலகின் 8வது பெரிய கோபுரம்
3. #திருமஞ்சன_கோபுரம் (வடக்கு - 157 அடி) உலகின் 12வது பெரிய கோபுரம்
4.  #பே_கோபுரம் (மேற்கு - 144 அடி)
உலகின் 14 வது பெரிய கோபுரம்

உலகிலேயே சில கோவில்களில் மட்டுமே ஆயிரக்கால் மண்டபம் (1000 தூண்கள்) உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் திருவண்ணாமலையிலும் உள்ளது..

https://www.facebook.com/groups/693443571156232/permalink/853086031858651/

சர்க்கரை நோய் வராமல் தடுப்போமே ...

சக்கரை நோய்  பற்றி பேசுவோம் இன்று வீட்டுக்கு இருவர் நாற்பது வயதில் நரை வரும் முன்னே முரணாக இந்த சக்கரை நோய் வருகிறது.. 

என்ன மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் இது பலருக்கு கட்டுக்குள் நிற்காமல் காலத்தைவிட வேகமாய் காலனிடம் அழைத்து செல்ல ஜட் வேகத்தில் உடலின் பாகங்களில் ஊடுருவி ஆட்கொள்ளியாக மாறி அவையங்களை செயலிழக்க செய்து சிலருக்கு விரல்களோ  ஏன் கால்களையே விழுங்கி விடுகிறது.. 

இந்த கொடிய மிருக நோய்க்கு இனிப்பான சக்கரை என்று பெயர்வேற ..
இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் வராமல் தடுக்கவும் சில டிப்ஸ் பகிரலாமா..

அவசர உலகத்தில் பொறுமை இழந்து பணம் தேடி ஓடலாம்.  ஆனால் உட்கொள்ளும் உணவிலுமா அவசரம்   ..

"நொறுங்க தின்றால் நூறு வயது" என்ற சொற்களை யாருமே நினைவில் கொள்வதில்லை..
அதனால் வரும்  தொல்லையே காலபோக்கில் சக்கரை வியாதியாக விஸ்வரூப மெடுக்கிறது..

ஆம் தினமும் மூன்று வேலை உணவு காலையில் அரசனைப்போலவும் மதியம் உழைப்பாளி போலவும் இரவில் பிச்சைகாரனைப் போல குறைந்த எளிமையான  உணவே உண்டு .. அதுவும் அரைவயிறு உணவு கால் வயிறு தண்ணீரும் கால் வயிறு காற்றுமாக வழக்கபடுத்தி கொண்டால் ஆரோக்கியம் நமக்கு அரனாக அமையுமே..
நவநாகரீக துரித உணவுகளை தவிர்த்து வயதிற்கேற்ப காரம் புளிப்பு குறைத்து சாப்பிட எளிதில் செரிமானம் ஆகும். 

அறுசுவை உணவில் தினமும்  நாம் இரண்டும் சுவையை பயன்படுத்துவதே இல்லை துவர்ப்பும் கசப்பும். அவைகளே எதிர்காலத்தில் சுகர் வராமல் நம்மை காக்கும்.  புளிப்பு அதிக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முட்டி வலியும் சுகர் அதிகமாக வர வாய்பிருக்கிறது.. 

 அவரவர் வாழும் மண்ணில் விளையும் தானியங்களையும் அங்கே கிடைக்கும் நிலத்தடி நீரும் பருகினாலே போதுமானது..  ஆரோக்கியம் பெறுகும்..
 
மன நிம்மதி தேவை எச்செயல் செய்தாலும் மனநிறைவுடன் இருக்க பழகுதல் அவசியமானது. முடிந்த போது எல்லாம் எச்சில் கூட்டி விழுங்கனும் அதுதான் சுகருக்கான மருந்தே உமிழ் கலந்து உண்ணும் உணவே தேவாமிர்தம். வாயை அசைக்கும் போது காற்று உள் புகாமலும் பேசாமலும் நடுநடுவே நீர் பருகாமலும் உணவு உட்கொள்ளல் வேண்டும்.. இனியாவது இதனை படி செய்யலாமே அடுத்த பகுதி தொடரும்..

Monday, 20 April 2020

தியானம் பழகு

1..தியானம் முதல்பகுதி...வெற்றி உன்னை தேடுகிறது. ஆம் நாம் செய்யும் செயலினால் ஏன் எந்த செயலும் செய்யாத தவம் மட்டுமே செய்யும் சித்தர்களுக்கும் வெற்றி கிட்டுகிறது.. தவம் மனஅலைகளை நேர் கோட்டில் சீர் அமைத்து  அவைகளை எண்ணங்களுடனும் எதார்த்ததுடனும் ஒற்று போகிறதா முரனாகிறதா... என்று உற்று நோக்கி ஊடுருவி கவனித்தலே தவம். முதலில் ஓரிடத்தில் ஒரு நிமிடம் ஒன்றாத போக்கு மட்டும் சரி செய்து விட்டால் மற்றவை எல்லாமே தானே நடக்கும். ஒரு இருக்கையை தேடி அமர்ந்து கொள்ளுதல். தினமும் காலை மாலை ஒரே நேரத்தில் செய்வது குறிப்பிட்ட நாள் தொடர்வது. பின் நாம் விட்டாலும் அது நம்மை விடாது தொடரும் கருப்பாய்.. கருவிலே திருவுடைய மகனாக திகழ்வோம்.. ஆம் நமக்கான எண்ண அலைகள் ஓர் நேர்கோட்டில் வர துவங்கும். எதிர்மறை முதலில் விலகத் துவங்கும். வான் காந்த பேராற்றல் நம்மோடு பேச துவங்கும். நேர்மையான செயல் எல்லாமே தானே நடக்கும்.. இன்னும் இன்னும் பெரும் அழகியல் நடக்கும்
தவம் எப்படி செய்ய வேண்டும்?
தவம் ஏன் செய்ய வேண்டும்?

இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.

கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.

மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!

ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

திருமந்திர பாடல் – 2816

இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.

நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
 மகரிஷி கண் திறந்து செய்யும் தியானம் பற்றி சொல்லிருக்கிறார். அது தீபஒளிதியானம்  கண்ணாடி பயிற்சி ஆகும்.
1) காலை மாலை இருவேளையும் சுமார் இருபது நிமிட நேரம் தவம் செய்ய வேண்டும்.

2) இடைப்பட்ட நேரத்திலும் அவ்வப்போது சிறிது நேரம் தவம் செய்ய வேண்டும்.

3) உண்ணும் போதும் பிற புலன் அனுபோகத்தின் போதும் ஆக்கினை

மற்றும் துரியத்தில் உயிரின் அசைவை கவனிக்க வேண்டும்.இது அறிவை அயராத விழிப்புநிலையில் வைத்திருக்க உதவும்.

4) பரபரப்பாக செயல்படுவதையும், உரக்கப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

5) மௌனவிரத காலங்களில் அதிகமாக தவம் செய்யலாம்.

6) மனதில் பேராசை, சினம், வஞ்சம், பொறாமை, வெறுப்பு தற்பெருமை,அவமதிப்பு, முறையற்ற பால்கவர்ச்சி, அவசியமற்ற பயம், அதிகாரபோதை, ஆகிய தீய உணர்வுகளும் எழாமல் மனதின் தூய்மையை காத்துக்கொள்ள வேண்டும்.

7) அறிவை இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும், உடல் மன நலத்திற்கான அறநெறி ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டும்.

8) ஒருநாள் நொடிப்பொழுதில் விண்(உயிர்) துகள்கள் அகக்காட்சியாக தெரியும்.உள்ளுணர்வாக(Intuition)  தத்துவங்கள் யாவும் விளங்கும்.

9) மனம் நிறைவு பெற்று அமைதி நிலை அடையும் இன்னும் தொடரும் 

Friday, 17 April 2020

பார்வை திறனை பாதுகாப்போம்

இன்று ஒருபுகைபடம் போட்டுஇதில் உள்ள எழுத்துகளை கண்டுபிடிக்க சொன்னேன்.  வாட்ஸ்ஆப் பதிவாக பலரும் தவறாகவே கூறினர்.  அதான் கண்களை பற்றி விழிப்புணர்வு பதிவாக நடுநிசையிலும்

பார்வைத் திறனை பாதுகாக்க சில எளிய வழிகள்...!

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.
7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். 

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.

தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

*வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்*

பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். ஆனால், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான்.

பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இதன் குறைபாட்டால் கண் எரிச்சல், மாலைக்கண், மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வைக்குறைவு, வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல் கண்பார்வை ஒத்துப் போகும் நிலை குறைந்து போவது போன்றவை ஏற்படும். 

வைட்டமின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டால் கண்ணீர் சுரப்பியின் வெளிப்பகுதி திசுவறைகள் தடித்து விடும். கண்ணீர் சுரப்பது நின்று விடும். விழிக்கோளத்தில் வெள்ளை நிறம் காணப்படும். வெள்ளை விழியில் சில புள்ளிகள் உண்டாகும். தொடர்ந்து வைட்டமின் ஏ பற்றாக்குறை நீடித்தால் முழுப்பார்வையும் இழந்து விடும். 

கருவிழியில் துளைகள் உண்டாகும். கண்கள் அடிக்கடி வறண்டு காணப்பட்டால் வைட்டமின் ‘ஏ‘ பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் இந்த வைட்டமின் சத்து குழந்தைகளுக்கு தரப்படலாம். கேரட், கறிவேப்பிலை போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைய உள்ளது.

அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி வைட்டமினுக்கும் பொருந்தும். இந்த வைட்டமின் அதிகமாகி விட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகும். பசியிருக்காது. உடலில் நமைச்சலுடன் கூடிய தோல் சிவப்பு, வலியுடன் கூடிய தசை வீக்கம், கை-கால்களின் எலும்புகளில் வலியுடன் கூடிய வீக்கங்கள் உண்டாகி விடும். 

மேலும், மூளையில் உள் அழுத்தம் அதிகரித்து தலைவலியும் ஏற்படும். தேவையற்ற அளவுக்கு வைட்டமின் ‘ஏ‘ யை உள்ளுக்குள் கொடுத்து விட்டு பின்னர் வேறு பிரச்சினைகளை உருவாக்கி விட்டு இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல், அந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும்.

வைட்டமின் ‘ஏ‘ என்பது குழந்தைகளுக்கு 1500 முதல் 6000 இன்டர்நேஷனல் யூனிட்டுகளும், பெரியோர்களுக்கு 5000 யூனிட்டுகளும், கர்ப்பிணிகளுக்கு 6000 யூனிட்டுகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 யூனிட்டுகளும் தான் தேவை. இதனை கவனத்தில் கொண்டு இந்த அளவில் கிடைக்கும் சத்தூட்ட பானங்களை சரியான அளவில் அவரவர் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். இப்போது இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இரவில் தாமதமாக உறங்குவது. இதன் காரணமாக கண்களுக்கு தேவையான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.

அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது. அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களைப் பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது.

மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

இவை அனைத்தையும் விட முக்கிய காரணமாக, வளரும் குழந்தைகள் தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளாததும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு கிடைப்பதில்லை.
கண்பார்வைக்கான முத்திரை

கண்களை பாதுகாக்க தினமும் சூரிய விடியலின் போது பார்க்கலாம்.  காயத்திரி மந்திரம் சொல்லலாம்.