Saturday, 22 November 2014

கழைகூத்தாட்டி

கழைக்கூத்தாட்டி வாழ்வும்,
அந்த கயிற்றின் பயணம்
போல தடுமாற்றத்தோடு
நடக்கிறது. தினம் 
ஒருவீதியாக நிறையா
வயிறோடு கல்வியில்ல 
கறைபடிந்த உடையோடும்....

வெற்றி

கவலைகளை காலில் 
போட்டு மிதித்து...
வெற்றிகளை தோளில்
சுமந்து புன்னகையோடு
வீறு நடை போடுங்க .. 
எதிர் காலம் நோக்கி.

மனம்

புற இருளில் 
தயக்கமின்றி 
நடந்து விடுகிறேன் .........
அக இருளில்தான்
தடுமாறி .

காவலார்கள்

காவலர்கள்...
============ 
கன்னியமானவர்கள் 
கடமைதவறாதவர்கள் 
காழ்புணர்ச்சி இல்லாதவர்கள்
நல்ல நண்பர்களாகவும்
இடர்வரும் போது கரம்
தரும் உறவு போலவும்,
உற்ற நண்பராகவும் ,
காலநேரம் பாராமல்
கடமை தவறாமல்
உன்னதமானவர்கள்.
ஒரு சில (நேர்மயில்லா)
காவலர்களால் நல்ல
மனிதருக்கும்
இழுக்காகி போகிறது
அவர்களும் மாறனும் என்ற ஆசையில்
காவல்களுக்கு ஒரு வீர வணக்கம்

சிவமே

வார்த்தையே வராமல் 
பக்தியில் தொழுகிறேன்.

பற்றை அகற்றவே
அழுகிறேன்.

அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.

நான் யார் என
அறியவே நின் பதம் 
பணிகிறேன் சிவமே..