Friday 11 September 2015

லவ் பேட்ஸ்




பறவைகள் வளர்ப்பது என்னதை சுகம் மகளுக்கு பிடிக்குமே என்று இரண்டு ஜோடி வாங்கி வந்தேன் அழகான இரண்டு கலர் வண்ணபறவை மஞ்சள் நிறமொன்று, பச்சை நிறமொன்று, நீல நிற மொன்று ,வெள்ளை நிறமொன்று என இரண்டு ஜோடி.

 அதற்கு பெயரிட்டேன் .  ஒயிட்டி.பீயுட்டி .ஸ்வீட்டி 
ஆர்ட்டி என்றும் சில மாதத்தில் அவை வெள்ளைநிற பறவை 5முட்டையும் மஞ்சள் நிறபறவை ஏழு முட்டையும் இட்டது ..மிக மகிழ்ச்சி வீட்டில் எல்லாருக்கும் நாம சரியாக பறவைகளை பராமறிக்கிறோம் என்று ..ஆனந்த கூத்தாடுவது போன்ற உணர்வு. 

பறவை முட்டை இட்டு 17நாள் கழித்து  ஒவ்வொன்றாக முட்டை குஞ்சுபொறித்தது. இரண்டுநாளுக்கு ஒரு முறை என்று பத்து முட்டையே பொறித்தது . மஞ்சள் குருவி இட்ட முட்டை ஆறும் வெள்ளை குருவி இட்டமுட்டை நான்கும் மீதி சல்லையாக போனது அவை ஒரு மாத்ததில் மிக அழகாக நிறம் மாறிய வண்ணத்தில் வளர்ந்து விட்டது அதன் தாயை ப்போல நான்கு பெண் பறவை ஆறு ஆண் பறவைகள் அழகாக கத்தும் .பாடும் . கொஞ்சும் சண்டையும் போடும் கையில் எடுத்து கொஞ்சலாம் விரலை கடிக்க வரும் .

அதற்கு உணவாக திணை . கம்பும் மட்டுமே இரணெடுநாளுக்கு ஒரு முறை கொத்தமல்லி தினம் தண்ணீர் மாற்றி மகிவும் பாசமாக பார்த்து வளர்த்தோம் ... 
மீண்டும் மூன்று மாதம் பொறுத்து மஞ்சள் குருவி ஐந்து முட்டை வைத்திருக்கு ....


அவை எப்படி பொறிந்தது .. அத்தனையும் காப்ப முடிந்தனவா எப்படி எல்லா குருவிகளும் வளர்த்தோமோ என்ற தொடர் அடுத்த பதிவில்...