Sunday 6 July 2014

நினைவு

உன் நினைவுகள் 
அழகான பூவாய் பூத்து 
சுகமான சுமையாக 
இதமான வலியாக 
வலம் வருகன்றன 
என் மனதேரோட்டத்தில்

Saturday 5 July 2014

வலிகள்

வரிகளில் உணரமுடியாத 
வலிகள் கூட கையளவு 
மனதில் கல்லறையாக .
.புதைந்து கிடக்கின்றன

கவிதை

உன் விழியில் 
துள்ளி விளையாடும் 
விண்மீன்கள் ..
உன் புன் சிரிப்பில் 
ஒளிந்திருக்கும் 
வசந்தங்கள் ..
மொத்தத்தில் பேசாத 
கவிதை என நீ

நிறைவு

வலிகளை கடந்தால்
வரிகள் பிறக்கின்றன
வாழ்க்கையை கடந்தால் 
நிறைவு பிறக்கின்றன
நிறைவு பிறந்தால் 
நிம்மதி மிளிர்கின்றன

அமைதி

இருப்பதை விட்டு இல்லாதவைகளை 
தேடி அலைந்து மன உளச்சலை 
அடைவதை விட கிடைத்ததில் 
பூரண மன அமைதி
வெற்றி நாடுவது சிறப்பானதே

கவிதை

கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில்
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி
மண் வரண்டு .....

காதல்

மேக கூட்டங்கள் உறவுகரம் நீட்டி 
அந்தி சாயும் வேலையில்
என் வீட்டு முற்றத்தில் 
முத்து போன்ற
தன் இதழ் பதித்து 
முத்தம் இட்டு கொண்டாடின 
மண் மீதான காதலை.
....

பனிதுளி

நீ அனுப்பிய ரோஜாவில்
பனித்துளி என்னை பிரிந்த 
உன் கண்ணீர் துளி 
என் கண்களுக்கு மட்டும்....

தியாகம்

வானத்தின் மேகங்கள் 
உயிர் தியாகம் செய்கின்றன ..
மண்ணில் மனிதர்களின் வாழ்வுக்கா....

குட்டி தேவதை

குட்டி தேவதை உனை 
கண்டது முதல்
மனம் குற்றால அருவி போல 
துள்ளி குதிக்கிறதே 
எனையும் சிறு பிள்ளையாக 
மாற்றி உன்னுடன் 
விளையாட அழைக்கிறாயே
மொன மொழியில்....

நாணம்

உன் கவிதைக(ள்)
காதலுடன் நாணத்தையும் 
தூண்டி விடுவதால்
செல்ல கோபமும்
வந்து மறைகின்றன ...
மின்னலாக ... 
தென்றலாக...

மழை

இடி வந்து இருளை
தழுவிகொண்டன 
மின்னல் வந்து
மேகத்தில் முத்தமிட்டன 
மழை வந்து மண்ணில்
விளையாடுகின்றன 
இரவு பகல் பாராமல் ...
சசிகலா

மழை

மழை பெய்திட 
ஒலைக்குடிசையில்..
குடிபெயர்ந்தன 
விண்மீன்கள்..! 
ஓலைக்குடிசை 
இளவரசனோ ..
குடிபெயர்ந்தான்
சேவல் கூட்டில்..
மழைக்கு ஒதுங்கி..

மகளே

புன்னகை பூக்கும் செல்ல மகளே..
அன்பை பொழியும் அன்பு மகளே..
அதிக கோபத்திலும் அழகு மகளே ..
செல்லமாய் சிதறும் சினங்களும் கூட 
மென்மையாய் என்னில் பூக்கிறதே .
தாய் பாசமே அன்றி வேறும் தோனல மகளே.

வெற்றி

வெற்றி தோல்வி இரண்டும்
இரு இரயில் தண்டவாளங்கள் போல
நாம் துவண்டால் தோல்வி தழுவிக்கொள்ளும்
முயன்றால் வெற்றி தழுவிக்கொள்ளும்.....

அனாதை

''அனாதை ''என்ற வார்த்தையை 
கூட ஆதரிக்க வேண்டாம் 
அவர்களுக்கு உறவு என்ற ஆடைகளை பரிசளிப்போம்

அன்பு

ஏதாவது கேள் என்றால் 
என்ன கேட்க 
தேவை என ஏதும்
இல்லா மனநிலையில்
உன் அன்பே போதுமானது
அனைத்திற்கும் 
தீர்வாகிறது

கேள்வி

கேட்காத கேள்விக்கு 
பதிலாக எதைத் தருவேன்
எழுத்தாய் கோருகிறாய்
வார்த்தையாய் கோர்தா?
வாக்கியமாய் வடித்தா?
பாடலாய் புனைந்தா?
என முற்று பெறாமலே 
கவிதை குழந்தையாக

அம்மா

அம்மாவின் அன்புகலந்த 
உருண்டை சோறு 
உப்பில்லாமல் இருந்தாலும் 
உணர்வு கலந்து இருக்கும் 
சுவை இல்லாமல் இருந்தாலும் 
நினைவு நீங்காமல் இருக்கும் அம்மாவின் 
உருட்டி தரும் சோறு ....