Saturday 22 November 2014

கழைகூத்தாட்டி

கழைக்கூத்தாட்டி வாழ்வும்,
அந்த கயிற்றின் பயணம்
போல தடுமாற்றத்தோடு
நடக்கிறது. தினம் 
ஒருவீதியாக நிறையா
வயிறோடு கல்வியில்ல 
கறைபடிந்த உடையோடும்....

வெற்றி

கவலைகளை காலில் 
போட்டு மிதித்து...
வெற்றிகளை தோளில்
சுமந்து புன்னகையோடு
வீறு நடை போடுங்க .. 
எதிர் காலம் நோக்கி.

மனம்

புற இருளில் 
தயக்கமின்றி 
நடந்து விடுகிறேன் .........
அக இருளில்தான்
தடுமாறி .

காவலார்கள்

காவலர்கள்...
============ 
கன்னியமானவர்கள் 
கடமைதவறாதவர்கள் 
காழ்புணர்ச்சி இல்லாதவர்கள்
நல்ல நண்பர்களாகவும்
இடர்வரும் போது கரம்
தரும் உறவு போலவும்,
உற்ற நண்பராகவும் ,
காலநேரம் பாராமல்
கடமை தவறாமல்
உன்னதமானவர்கள்.
ஒரு சில (நேர்மயில்லா)
காவலர்களால் நல்ல
மனிதருக்கும்
இழுக்காகி போகிறது
அவர்களும் மாறனும் என்ற ஆசையில்
காவல்களுக்கு ஒரு வீர வணக்கம்

சிவமே

வார்த்தையே வராமல் 
பக்தியில் தொழுகிறேன்.

பற்றை அகற்றவே
அழுகிறேன்.

அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.

நான் யார் என
அறியவே நின் பதம் 
பணிகிறேன் சிவமே..

முயற்சி

யுத்தங்களும் வீழ்வதில்லை...
வெற்றிகளும் நிலையில்லை ...
ஆனால் முயற்சி மட்டுமே தொடர்ச்சியாக..

ஆதவன்

உனக்கும் எனக்குமான 
கவிதை வரிகள் 
ஏட்டில் இல்லாமல்
எண்ணத்தில் மட்டுமே 
தினம் உதிக்கும்
ஆதவனாக ஒளிரும்
தினம் தினம்!!!..

தினம்

விடியல் புதுமையாகவும் 
மனம் நிறைவாகவும்
 துயர்களை வெல்லும்
 தைரியமும் மனதிடமும்
 தினம் நிலையாக இருக்கட்டும்

மீனும் மனமும்

வட்டத்திலும்
விட்டத்திலும்
அடைபடாத குளத்து
மீன்களே....

என் மனதையும் 
உன்னோடு 
நீந்தவைத்தாயே...
துள்ளலோடு....

தனிமையற்ற 
கூடோ குளங்கள்....

மௌனம்

உன் நினைவுகள் 
என் எண்ணத்தில்
மௌனகீதம் பாடுகிறதே ...நித்தமும்

நட்பு

பல வண்ணங்கள்
வானவில்லிற்கு அழகு
நல் எண்ணங்கள்
வாழ்விற்கு அழகு......
பொறுமை
எல்லாவற்றிற்கும் அழகு....
கடும் சொல்
நட்பிற்கு அழகல்ல......
காலம் எல்லாவற்றிலும்
சுவாசிக்கிறது
அழகாக ..
''நட்புக்காகவே''!!!.....

நதி

புறப்பட்ட இடம் 
தெரியாமல் ஓர் 
அருவியென மலை 
மீதிருந்து வீழ்ந்து 
கொண்டிருக்கிறேன் ..
இருந்தபோதும்
சேருமிடம் தெரிந்து
தொடர்கிறதென் பயணம்

ஆசை

நிறைவேறா .....ஆசை
நிராசை ஆகிறது .
நிறைவேறிய ஆசை...
வெற்றிக்கு வித்தாகிறது.

மனம்

துடிப்புடன் உலாவரும்
என் இதயம் ..
உன் நிழலை காண
ஏங்கி தவிக்கிறது ...
''மனது''