Friday 25 April 2014

விதை

என்னில் நீ தவழவும்
என்மடியில் இளைபாரவும்
உன் சந்ததி என்
பிள்ளைகளாகவும்
பாவிக்கிறேன்

நீ மட்டும்
எனக்கு வாழ
இடமில்லாமல்
என் உயிரை
மாய்க்கிறாயே...

மன்னோடு
புதைக்கிறேயே
எனக்கு உயிர்
தண்ணீர் கூட
தரமனமில்லா
மனிதா
உனக்கு வாழ
நீர் வேண்டுமோ...
என கண்ணீரோடு

இப்படிக்கு மரம்

மரம்

மண்ணில் மைந்தர்கள்
மலர வேண்டுமெனில்
மண்ணின் மைந்தனான 
மரங்களை காப்போம் ..
மழை தருவிப்போம்
மகத்தான இயற்கை
வளங்களை அடுத்த
மாமாங்கத்துக்கு
தத்துகொடுப்போமா

Thursday 24 April 2014

காதல்

காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்.

Sunday 20 April 2014

காதல்

ஏதோ ஒரு புள்ளியில்
துவங்கிய நம் காதல்
இழை ஓடி
பிழை களைந்து
குணம் நாடி
குலம் காத்து
குற்றால அருவி போல
குருதியில் கலந்து
கற்கண்டாய் இனித்து
காலனுக்கும் கை அசைத்து 
வழியனுப்பி
விதியை திருத்தி
விண்ணில் உலா வருவோமோ

சசிகலாதனசேகரன்

தனிமை

தனிமை எனும் 
தடாகத்தில் எத்தனை 
தாமரை மலர்ந்தாலும் 
மனம் வீசுவதில்லை..

குணம் நாடும் குழந்தை
அன்பே கோபுரமாக திகழ்கின்றன..
இதயத்தின் வாசலில் ...சசிகலாதனசேகரன்

வெற்றி

சிந்தனையே 
எழுத்தாகிறது
எண்ணங்களே 
வாழ்க்கையாகிறது 
வாழ்க்கையே
 பிறருக்கு 
பாடமாகிறது 
பாடமே 
போதனையாகிறது 
போதனையே 
சோதனையாகிறது
சோதனைதான் ...
வேதனையின் 
வெற்றிப்படிகளாகிறது ...
சசிகலாதனசேகரன்

Saturday 19 April 2014

தலைமுறை

பாட்டி அம்மாவை 
பாராட்டினாள்..
அறிவாளி என்
மகளை போல 
யார் இருக்கா என

அம்மாவோ தன்
குழந்தையை அறிவாளி என
பெருமை பாராட்டுகிறாள் ..
ஆனால் குழந்தைகளோ
போம்மா உனக்கு
என்ன தெரியும் ? ? ?

பயணம்

பயணங்கள் பல விதம்
ஒவ்வொருவருக்கும் 
ஒரு விதம் ..
தலைமுறை 
பயணம் பலருக்கு ..

தாத்தா பாட்டி 
நடை பயணம் 
குதிரை வண்டி 
மாட்டு வண்டி
பயணம்....

அப்பா அம்மா
மிதிவண்டி பயணம்
இரயில் பயணம்
பேருந்து பயணம்
கப்பல் பயணம்..

இக்கால செல்லங்களுக்கு
இவை அதிகம்
அறிமுகம் இல்லாமலும்
ஆனாலும்

இருசக்கர வாகனம்
மகிழ்ழுர்ந்து
வான வூர்தி இன்னும்
எத்தனையோ வரும்
காலத்தின் பயணம்

...சசிகலாதனசேகரன்

சிவன்

சிவனே நின்தாள் பணிந்தேன்
பொன்னடி போற்றி...
கோள்களின் தாக்கத்திலிருந்து 
எனை காப்பாயே..
காலத்தை வெல்ல 
நல் வழி வகுப்பாயோ...
தில்லையின் கூட்டதே 
தென்னாடுடைய சிவனே
அம்பலத்தில் ஆடுபவனே 
சரணம் சரணம்....

விருட்சம்

விருட்சங்கள் வளர்ந்து
கொண்டே இருக்கின்றன..
அவை மடிவதில்லை 
மனிதனை போல
ஆனால் ..
மனிதனாலேயே மடிகன்றன
அவன் வாழ்வாதரத்திற்கு
பூ வாக ,காயாக
கனியாக , தண்டாக..
தாவரமாக..
மரமாகி பின் விறகாகி
பல வீடுகளில்
கதவுகளாக
கூரைகளாக...
மரம் மரணிபத்தில்லை ..
விருட்சங்கள் வீழ்வதில்லை..
வீனர்களின் வித்தையில்
மறுபிறவியாக....

Thursday 17 April 2014

நான் எழுதிய முதல் கதை

நான் எழுதிய முதல் கதை பாக்யா புக்ல வந்து இருக்கு

அன்பு

அன்பே 
உனை நினைத்து 
உள்ளம் உருகி
உயிர் எழுத்தையும்
எதுகை மோனையும்
கோர்த்தெடுத்து
காவிய தலைவனாக
காவியம் படைக்க 
கவிதை எழுத 
துவங்கினால் உன்
அன்பை அளவிட
தமிழிலேயே வரிகள்
போட்டி போடுகின்றன
உன் அன்பை
அளவிட முடியாமல்
கவிதை முற்று பெறாமலே......

Friday 11 April 2014

விழி

கண்ணுக்குள்
கனவே நீ...

விழிமூடினால்
நீ மறைவாயோ என..

விழியில்
உன் வாசம்
கண்டது முதல்
மை யெழுதேன்...

ஆயிரம் மனத்துயர்
வந்தாலும்
கண் கலங்கேன் ...


கண்ணுக்குள்  உன்
பிம்பம் கலையாமல் இருக்கவே......

Tuesday 8 April 2014

ஆசைகள்

ஆசைகளை மறப்பவர்கள்    மனிதன்
ஆசைகளை துறப்பவர்கள்    துறவி
ஆசைகளை மறைப்பவர்கள்  வேடாதரி
ஆசைகளை புதைப்பவர்கள்  சாதனையாளன்
ஆசைகளை  வளர்ப்பவர்கள்  வஞ்சகன்
ஆசைகளை தொலைப்பவர்கள் தொரோகி
ஆசைகளை  தூண்டுபவர்கள்  விரோதி
ஆசைகளை  தூற்றுப்பவர்கள்   குற்றவாளி
ஆசைகளை  மதிக்காதவர்வகள்   கடன் காரன்
ஆசைகளை  துதிப்பவர்கள்  தூயவன்
ஆசைகளை எதிர்ப்பவர்கள்  ஏமாளி
ஆசைகளை  துவள்பவர்கள்  சோம்பேரி
ஆசைகளை  விட்டுதருபவர்கள்  கையாளாகத்தனம்
ஆசைகளை  சேமிப்பவர்கள்  புத்திசாளி
ஆசைகளை  பகிர்பவர்கள்  நல்லதோழன்
ஆசைகளை  ஆசிர்வதிக்க படுபவர்கள் நல்ல தந்தை
ஆசைகளை  தாரை வார்த்து தருவது அம்மா
 ஆசைகளை மாற்றி கொள்வது (பொற்றோருக்காக ) நல்ல பிள்ளை என போற்றுகிறான் ....

Monday 7 April 2014

தேடல்

தினம் தினம்
ஆயிரம் தேடல்கள்
தேவைகள்..

எதை தள்ளி வைக்க 
என நினைக்கும் 
முன் தேவை இல்லா
பல பரிவாக 
வாசல் வந்து 
வாழ்த்துகின்றன...

தேடல்கள் காலத்தின்
பிடியில் மாட்டி
கை வர மறுகின்றன...

தேடலில் விட்டு
விலகும் போது
அனைத்தும் நம்
வசமாகிறது .........

நகம்

நானறிந்த நாளிட்களில்
உன்னை நான்
வெட்டியதே இல்லை.. 

என் திருமணத்தின் 
போதே உன்னை வெட்டினேன்.
நீயாக வருவாய்
நீயாக எனை பிரிவாய்..

நான் களைந்த
ஆடைகளை கார் மேக
வியர்வையிலிருந்து
விடிவிக்கும் போது
நீ என்னை விட்டு
பிரிந்தாயே
நானறியாத தருணம் ....
என் நளின

#''நகமே''..........

அன்பு

உன் அன்பு 
எனும் மலரை 
நான் சூடி கொள்ள
சரியான தருணம்
அமையா விடினும்...
அவை வாடி மடிவதில்லை..

உன் அன்பின் 
பிரவாகத் தோட்டத்தில்
பன் மடங்கு மெருகேறிக்
கொண்டே இருக்கின்றன...
ஆயிரம் நிலவின் குளுமை போல.....

Saturday 5 April 2014

தந்தை

தந்தை மகளுக்காக
விரல் பிடித்து நடைபயில தந்தான்
விரும்பியதை எல்லாம் 
பாசமாக பரிசளித்தான்
மகள் வளர வளர
அவள் ஆசைகளும் வளர்ந்தன
பஞ்சு மிட்டாய்
குச்சி மிட்டாய்
பாட்டாடை தாவனி
தங்க கொலுசு வைர வளையல்
பள்ளி படிப்பு பட்டபடிப்பு வரை
சின்ன சின்ன ஆசைகளை
அள்ளி தந்த தந்தை
ஏனோ மகளின்
பருவ வயதில்
மலரும் அன்பு
காதலுக்கும் மட்டும்
''தடையாகிறானே''...

தமிழ்

அக வரி

அனுபவம் அழகு
ஆசை சுவடு
இசை இனிமை
ஈகை நிலை
உண்மை நிலைத்தல்
ஊக்கம் வரவு
எல்லை தடை
ஏக்கம் எளிமையல்ல
ஐயம் எதிரி
ஓட்டம் வாழ்க்கை
ஔவை போல ஞானமும்
ஆயுதம் போல முற்று பெறாமல் இருப்பதே வாழ்க்கையானதோ .......

பெண்

பெண்ணுக்கு பெண்ணே எதிராகிறாள்..
ஒரு கைம்பெண்ணுக்கு 
சடங்கு செய்யவதை பார்த்து
உடன்பிறப்பும் 
பெற்றமகனும் 
கூட ஜடமாகி போகிறான்
அந்த நிலை கண்டு பாரதி
கண்ட புதுமை பெண்
யாரும் இல்லையோ
இந்த பாரில் ஜனிக்கலையோ
பல கிராமங்கிளில்
இந்த இடர் துடைக்க
நான் புறப்படுகிறேன்
நீங்களும் வாரீர் தோழியரே

மங்கையர் மலரில்வந்த என் கட்டுரை

மங்கையர் மலரில்
வந்த என் படைப்பு

அனாதை

நந்தவனத்து 
மலர்கள் 
கூடி மாலையானது ...

''அனாதை ''
    இல்லம்

கோபம்

உன் கோபத்தில்
சிதைந்து போனேன்..
ஆனலும் 
உன் அன்பில் 
உயிர்தெழுந்தேன் 
மறுபிறவியாக ......

காலம்

காலம் பொன்னாது 
கண் இமைக்கும் 
நேரத்தில் கடந்து போகும்...
காலத்தை நாம 
நேசிக்கா விட்டால்
காலன் கூட 
நம்மை 
மதிக்க மாட்டான் .....

பிழை

நிலவின் பழுதையும்
கவியில் பிழையும் 
ரசிக்கும் நீ.. 
என் பிழையை
மட்டும் 
வார்த்தைகளால்
வாரி இறைகின்றாயே 
அன்பே.....சசிகலா தனசேகரன்

பரிசு

கைக் கெட்டா
வெற்றி கனி 
கைவர பெரின்
கடும் உழைப்பும்..

தோல்வியில் 
துவளாத மனமும்...
அன்பின் உருவான
அன்னை தந்தை 
ஆசியும்..

கணவனின் கனிவும்
பிள்ளைகளின்
ஆலோசனையும்..பும்

#நட்பின் ஊக்குவிப்பும்
விடா முயற்சியும்
இருந்தால்
வெற்றி வாகை நம் தோழிதானே....

சசிகலா சேகரன்

விழி

இமை மூடும் 
போதெல்லாம் விழித்து 
கொள்கிறது உன் 
நினைவுகள் துணையாக......

Thursday 3 April 2014

தங்க மங்கையில் என் கட்டுரை

தங்க மங்கையில் என் கட்டுரை

Wednesday 2 April 2014

அனாதை

நந்தவனத்து
மலர்கள்
கூடி மாலையானது ...

''அனாதை ''
இல்லம்

அம்மா

உறவுக்கு
பெருமை
கூடி வாழ்தல்....
பணத்திற்கு
பெருமை
பகிர்ந்துண்ணல்...
அன்புக்கு
பெருமை
விட்டுக்
கொடுத்தல்...
Add caption
பண்பிற்கு
பெருமை
பரிவு காட்டுதல்...
இன்பத்தில்
பெருமை
இன் சொல் பேசுவது...
வல்லமைக்கு
பெருமை
தலை வணங்குதல்...
பாசத்தின்
பெருமை
நேசிப்பதே..
நேசத்தின் சிறப்பு
''அவள் '' அன்னை..

விதை

உன் மீது உள்ள
காதலை மனதில்
புதைத்தேன் ..
அது 
''க''..வி...தை ..யானது