Saturday 28 February 2015

அன்னை

கண்ணே!
 மணியே!
கட்டி கரும்பே!
மானே !தேனே!
மரகதமே !
மரிக்கொழுந்தே !
மலர்செண்டே!
வையகம் போன்ற
வந்த என் குல விளக்கே
இன்னல் போக்க வந்த
இன்னிசையே
என வர்னித்து பாடுகிறாள்
ஒரு அன்னை
தன் மகன் இறந்ததை
அறியாமல் தூளியை
ஆட்டிக்கொண்டே



சிவமே

எண்ணிலடங்கா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
என் சித்தம் உன்னைச் சுமந்தே
பித்தாகி போனதடா
பிறைசூடனே

அன்பு

தோற்குமோ
உன்மீதான
 அன்பு
அழிவில்லாத
 கடல் அலைப்போல
உன்னை
வந்து வந்து
காண்கிறது......

புன்னகை

உறவுகளில் விரிசல்கள் தேவைதானா .....
அவர்கள் ஆயிரம் கேள்விகளை 
தொடுத்தாலும் புன்னகையை
பரிசாக  பதிலில்அளித்து இனிமை
 தந்தால் விரிசலை தவிர்க்கலாமே....

சுவாசம்

உன் சுவாசத்தையே நான் நேசிக்கிறேன்
உன் சுவடுகளிலேயே பயணிக்கிறேன்
உன் நேசத்தையே யாசிக்கிறேன்......

அனுபவம்

அனுபவம் பலவிதம் 
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மனிதரின் மனம் பொறுத்தே 
அவை ஏற்கப் படுகின்றன ......

சிவனே

பட்டமாக பறக்கிறேன்... 
இருளும் விடியலும் பாராமல் 
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து 
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....

அனுபவம்

தோல்விகள் அனுபவ 
பெட்டகமாக
வெற்றியின் ஆணி
வேராராக வளர்கிறதே
மனதில் வைராக்கிய விழுதுகளாக...

சிவனே

எங்கெங்குமே நின்னையே
 காண்கிறேனடா சர்வேசா...
 வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ 
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே 

அடங்கிவிடும் பாழாய்
 போகும் இந்த பிறவப்
 பயனாக நின்பொற்பாதம்
 தொழுகிறேன் 
திஅருணாசலனே 
அடைக்கலம் தாராயோ.!!!

உன்னை அறிந்தால்

தேடிக் கொண்டே இருக்கிறேன் ....நீ 
அருகில் இருப்பதை உணராமலே..

சிவனே

நினைத்தவைகளையும் 
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு 
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத 
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்