Tuesday, 5 August 2014

முகநூல்

எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து
இங்கே முகநூல்
மூலமாக கிடைத்த
முத்தான பல ''நட்பு''
முகம் காணாமல் 
உதவும் உள்ளம் 
இறைவன் தந்த
அன்பு பரிசில் 
நினைகிறேன் 
இன்று .......

தேடமறந்தேன் ....

எதை தொலைத்தேன்
எங்கே தொலைத்தேன்
என்பதையே மறந்து தேடுகிறேன்
எப்படி தொலைத்தேன்
யாரிடம் தொலைத்தேன்
எங்கேயும் கிடைக்கவில்லை
என்தேடலும் நிறுத்த வில்லை
தொடரும் தேடல்..
அகத்துக்குள் தேடமறந்தேன் ....

பட்டம்

இரு(திரு)மணங்களின் பரிசு 
''குழந்தை''
இயற்கையின் சாபமோ 
''மலடு'' 
பல்கலைகழத்தில் கிட்டாத பட்டம்

''ம்''

''ம்'' என்ற வார்த்தைக்குள்
ஆயிரம் கவிதைகள் 
புதைந்து கிடக்கின்றன.

மகளே

உன் விழியில் 
துள்ளி விளையாடும் 
விண்மீன்கள் ..
உன் புன் சிரிப்பில் 
ஒளிந்திருக்கும் 
வசந்தங்கள் ..
மொத்தத்தில் பேசாத 
கவிதை என நீ

நிம்மதி

வலிகளை கடந்தால்
வரிகள் பிறக்கின்றன
வாழ்க்கையை கடந்தால் 
நிறைவு பிறக்கின்றன
நிறைவு பிறந்தால் 
நிம்மதி மிளிர்கின்றன

அமைதி

இருப்பதை விட்டு இல்லாதவைகளை 
தேடி அலைந்து மன உளச்சலை 
அடைவதை விட கிடைத்ததில் 
பூரண மன அமைதி
வெற்றி நாடுவது சிறப்பானதே

ஈகோ

இரண்டு உள்ளங்களுக்கும் உண்டான
இடைவெளி .....(ஈகோ)

மண் வரண்டு

கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
மண் வரண்டு ..... ..... .....

ரோஜா

நீ அனுப்பிய ரோஜாவில்
பனித்துளி என்னை பிரிந்த 
உன் கண்ணீர் துளி 
என் கண்களுக்கு மட்டும்....

குட்டி தேவதை

குட்டி தேவதை உனை 
கண்டது முதல்
மனம் குற்றால அருவி போல 
துள்ளி குதிக்கிறதே 
எனையும் சிறு பிள்ளையாக 
மாற்றி உன்னுடன் 
விளையாட அழைக்கிறாயே
மொன மொழியில்...

தென்றலாக

உன் கவிதைக(ள்)
காதலுடன் நாணத்தையும் 
தூண்டி விடுவதால்
செல்ல கோபமும்
வந்து மறைகின்றன ...
மின்னலாக ... 
தென்றலாக...

இரவு பகல்

இடி வந்து இருளை
தழுவிகொண்டன 
மின்னல் வந்து
மேகத்தில் முத்தமிட்டன 
மழை வந்து மண்ணில்
விளையாடுகின்றன 
இரவு பகல் பாராமல் ...

ஒலைக்குடிசை

மழை பெய்திட 
ஒலைக்குடிசையில்..
குடிபெயர்ந்தன 
விண்மீன்கள்..! 
ஓலைக்குடிசை 
இளவரசனோ ..
குடிபெயர்ந்தான்
சேவல் கூட்டில்..
மழைக்கு ஒதுங்கி..

மங்கை

தொட்டு விடும்
தூரத்தை எட்டி
பிடிக்க எத்தனிக்கும் 
எழிலான இயற்கை 
மங்கை

புன்னகை

உன் புன்னகை
என் இதயத்தில் 
ஏதோ செய்கிறது 
இனம் புரியாத மகிழ்வு
நீர் குமிழாக 
பறக்கிறது தினமும் 
நீ பால்வாடி போகும்
போது எனை கண்டு கண் சிமிட்டுவது....

விடலை

மாயமெனும் 
காதல் வட்டத்தில்
வீழ்ந்து விட்டால்.. 
விட்டமும் புரிவதில்லை 
விடியலும் உணர்வதில்லை 
விடலைப் பருவத்தில் .....

கவிதைகள்

அன்பின் விடியலோ
கவிதைகள்
கவிதையின் புதையலோ
வார்த்தைகள்
வார்த்தையின் வசந்தமோ
கோர்வைகள் 
கோர்வையின் சரங்களோ
சதிராடுது 
அன்பின் ஊற்றாக...

உறக்கம்

உன் ஆழ்ந்த உறக்கத்திலும் 
மொழிகளற்ற கவிதை உமிழ்கிறதே.

மனம்

உன் செல்ல கோபங்களில் 
என் மனம் சிறகொடிந்த 
பறவையாக மாறுகிறதே.....

மௌனம்

உன் மௌனக் கீற்றுகளும்
எனக்கு கவிதையாகவே 
மணக்கிறது...

மௌனம்

எதையோ பேச நினைத்து 
மறந்த நிலையில் 
மௌனங்களோடு 
மனதில் பேசுகிறேன்

பதில்

குறைவான வரிகளிலே 
விழிக்கிறதோ
பதில் எனும் முகவரி

"வரம் "

"வரம் "என்பது கோவிலில் 
மட்டும் கிடைப்பது அல்ல .....
நல்லவர்கள் சொல்லும் 
வார்த்தைகள் கூட 
வரமாகிவிடுகிறது 
இப்படிக்கு ..
குறைஒன்றும் இல்லை

வாசம்

எழுத்துகளின் கூட்டில் 
எத்தனை ஏகாந்தம் 
வாசம் வீசுகிறது. நான் 
எட்டிப் பார்க்கையில் 
எல்லாம் கவிதைச் சரமாக
மாறி மலர்களாகப்
புன்னகைக்கின்றன

நிறைவுகள்

நிறைவுகள் எல்லாம் நிறைகள் அல்ல
தினம் பொருள் தேடி இதம் காணும் 
எளிமையே நிறைவான நிறை...

கவிதை

எழுதிய கவிதைகளில் 
உயிர்ப்பு இருப்பதில்லை.
எழுதாகவிதையில் 
ஜனிக்காமலே 
மனதில்
பலகவிதைகள்..

அவரச ஊர்தி

அவரச ஊர்தி
அபாய ஒலியின்றி
அபலை மனது
ஆழ்ந்த அமைதியில்

தூறல்

விடியலில் மின்மினியாக 
மேனி வருடி கண்சிமிட்டிய 
தூறல் என் கைவண்ணதில்
இழையோடிய வண்ணக்
கோலங்களை களைத்து 
மறுபடியும் மேகத்திற்க்குள்ளே 
மறைந்து விட்டனவே...

சிவனே

எல்லாம் அவனே சிவனே 
நடையாகவும் பேச்சாகவும்
நிழலாகவும் நினைவாகவும்
நிஜமாகவும் நிர்மலனாகவும்
நிறைவாகவும் நீராகவும் 
நானகவும் நினைவாகவும்
சிவனே சீவனாகவும்
சித்தனாகவும் பித்தனாகவும் 
எல்லாமாகவும் எல்லையற்றவனாகவும் 
எழிலாகவும் மொழியாகவும் 
முடிவால்லாஅருளாகவும் 
காத்திடுவான் குருவாக அருளிடுவான்

விடை

விடைதெரியாமல்
விழிக்கிறேன் ..
என்னுள்ளே 
புதைந்து இருக்கும்
விடைகளை காணாமல்

கீதம்

விடுவிக்க படாமலே 
விடுதலைஅன்பில் மட்டுமே 
விழியின் கீதம்

கோபம்

கோபம் எனும் கோபுரம் ஏறி
அன்பு ,பண்பு ,பாசம், பகிர்வு 
உறவு, உதவி,உன்னதம் போன்ற
நற்குணங்களை புதைகுழியில் 
புதைத்து விடுகின்றனர். சிலர் பிறகு
நிம்மதி எனும் வலைவீசி எதை தேட

உறவு

கறுப்பு எண்ணை வடிந்த முகம்
எல்லாம் உழைப்பின் மூலதனம்....பல ஆண்களின் இலக்கணமாகவே இவை உறவாடுகின்றன.....(உறவு பாலமாக

பனிதுளி

மலரின் பனிதுளி போல
நாமும் கவலையில்
ஆழ்ந்து போகாமல் இருக்க வேண்டும்

பட்டாம் பூச்சி

விரும்பி விரும்பி 
நெருங்கி நெருங்கி 
தயங்கி தயங்கி 
மயங்கி மயங்கி 
இணங்கி இணங்கி 
உனை தழுவ 
வருகிறேன் .நீ
விலகி விலகி
விருட்டென
சிறகு விரித்து
சிட்டாய் பறக்கிறாயே ..
என் வீட்டு பட்டாம் பூச்சியே

விந்தை

வீதி நெடுகிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள் 
அமைந்தாலும் அதில் 
அங்கே அங்கே குடிசைவீடு
அதில் எண்ணற்ற
நட்சத்திரமும் நிலவும்
அழியா கோலங்களால் நிரம்பின..
.(வறுமையின் வெறுமை)