Wednesday 22 July 2015

இலக்கணம் புத்தகம் தேமதுர தமிழ்

நான் எழுதிய இலக்கண புத்தகம் 

சுவாசம்



என் சுவாசக் காற்றின் நாதமே கீதமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல நீ அருகிலுள்ள போதே நேசித்தும் வாசித்தும் கொள்கிறேன்..

நிலவொலியில் நிழலாடும் கனவுகள் விடியலைதேடி காத்திருக்கிறது நிஜமாக

மகிழ்வு

மகிழ்வான தருணம் ஒவ்வொரு நொடிகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமிக்கிறேன் ..

வரம்

வாழ்க்கையெனும் வானத்திலிருந்து இன்பமெனும் மழைதுளியை என்றென்றும் என் கைகளில்

 ஏந்துகிறேன் 

தூரம்

வெற்றியின் விளிம்பில்
ஆனந்த களிப்பில் 
ஏதும் அறியா 
பேதையாக 
திரும்ப பார்க்கிறேன். 
கடந்த தூரத்தை விட 
இழந்த மகிழ்வுகள் 
எண்ணிலடங்காதவை..

காதல்

காதலால் 
காலத்தையும் 
கடக்கலாம்....
 
காதலில்லாமல்
கன நேரத்தையும்
 கடந்து போக முடியல ...

ஏக்கம்

சோதித்துக் கொண்டே
 இருக்கிறாய் என் 
சந்தோஷங்களை..

தோஷம் கழித்த கன்னிப்
பெண்ணின் ஏக்கம்..

மெய்

உண்மை 
ஊமையாகவும் 
பொய் தேனாகவும்
 இனிக்கும் சில நேரம்...

மழை

மெல்ல மெல்ல ஆதவனின்
கதிர்களை முத்தமிட்ட 
மேகங்கள் தன்நிலை 
மறந்ததோ 
மழையாக மண்ணையும்
 முத்தமிட துடிக்கிறது
 இதோ இதோ முத்தமிட்டு 
கொண்டே என்னைப் 
பார்த்து புன்னகைக்கிறதே
 நீயும் வா விளையாட
 என்றே கரம் தந்தது