Wednesday, 25 June 2014

இருப்பதை விட்டு 
இல்லாதவைகளை 
தேடி அலைந்து 
மன உளச்சலை 
அடைவதை விட 
கிடைத்ததில் பூரண
மன அமைதி பெற்று
வெற்றி நாடுவது சிறப்பானதே

உறவுகள்

அத்தை மகளுக்கும்
மாமன் மகளுக்கும்
இயற்கையிலேயே ஒர்
ஈர்ப்பு பிறப்பிலேயே
உறவில் மணம் முடித்தால்
ஊனம் நேறுமோ
என எண்ணி
ஏக்கங்களை எளிதில்
மறக்க முடியாத
இளைய உள்ளங்களின்
விரக தபாங்கள்

Saturday, 21 June 2014

பார்வை

சூரியனை சூடி
நிலவின் ஒளியோடு
நாணலை பிண்ணி
நளின நடையோடு
வான உடை உடுத்தி
மேக ஒப்பனையுடன்
உனை காண
வருவேன் தென்றலாய்..

கனவு

நித்திரைக்குள் 
காட்சிகள் மிளிரட்டும்
நிழலாக வரும் கனவுகள்
நிஜமாகட்டும் நிலையாக..

மனம்

வரிகளில் உணரமுடியாத 
வலிகள் கூட கையளவு 
மனதில் கல்லறையாக .
.புதைந்து கிடக்கின்றன

கவிதை குழந்தை

உன் விழியில் 
துள்ளி விளையாடும் 
விண்மீன்கள் ..
உன் புன் சிரிப்பில் 
ஒளிந்திருக்கும் 
வசந்தங்கள் ..
மொத்தத்தில் பேசாத 
கவிதை என நீ

சிந்தனை

எங்கே சென்றாய் சிந்தனையே
எதிலே சிக்கிக் கொண்டாயோ 
எல்லாவற்றையும் கடந்து வா 
சீக்கிரம் காற்றில் கரையலாம் 
கவிதைமழையில் நனையலாம் .

நிம்மதி

வலிகளை கடந்தால்
வரிகள் பிறக்கின்றன
வாழ்க்கையை கடந்தால் 
நிறைவு பிறக்கின்றன
நிறைவு பிறந்தால் 
நிம்மதி மிளிர்கின்றன

Thursday, 12 June 2014

பார்வை

விக்கித்து நிற்கிறேன் 
வீதியில் உன் பார்வையில் 
எனை சிறை பிடித்தபோது

விதி

நான் உனை நெருங்கி நெருங்கி வருகிறேன் 
நீ என்னை விலகி விலகி போகிறாய் 
ஏன் இந்தகண்ணாமூச்சி விளையாட்டு 
விதியே.....போதும் உன்விளையாட்டு ...

மனமே

மனமே நீ ஜனித்த காரணம் மறந்தாயோ
இடறிவிழும் போதையில் விழிந்தாயோ
காலங்கள் கடந்தன.கடமைகள் சுட்டன
கண்ணிமைக்கும் நேரத்தில்
வருடங்கள் உருண்டோடின..
வந்த வேலை முடியாமல் 
பிறவி பயனடையாமல் பதராய்
போவாயோ மனமே..
சிவனை நினைத்து ஜீவனை
தூண்டிவிட்டாயோ 
மனமே விழித்து விடு..
விடியா விடியலில்
புதைந்து போகாதே..
உன்னில் விடியலை தேடு
ஜீவனில் சிவனை நிறுத்தி
சிந்தையை மெறுகேற்று மனமே.

கருத்தொன்றி உன்பாதம்
பற்றினேன். பித்தா பிறை சூடா
என் பிறவி பலனை போக்கி
நின் பாதம் சரணடைகின்றேன்.....

கருவறையில் கற்ற
பழக்கம் நாமே
நினைத்தாலும் 
மாற முடியாம கல்லறை
வரை தொடரும்
அம்மாவின் போதனைகள் 
நன்றி ''அம்மா''

உறவுகள் இல்லாத போது 
ஊஞ்சலோடு உறவாடினால் 
குழந்தை போன்ற மனம் ஆடும்
தொட்டில் குழந்தையாக 
தாயின் நினைவுகளோடு 
தென்றலின் வருடலோடு 
நிலவின் குளிரோடு 
உன் நினைவின் பிரசவமானது

பாதை

ஏதேதோ எண்ணங்கள்
எண்ணங்கள் எல்லாம்
வண்ணங்கள்
வண்ணங்கள் எல்லாம் 
வசந்தங்கள் 
வசந்தங்கள் எல்லாம் 
தினம் பூமாரி பொழியாதா
என்னில் புன்னகை பூவாக
விடியும் ஓர் நாள்
பூ மழையாக....
என் பாதையில்

Wednesday, 11 June 2014

மதுஎன்ற போதை

அவனுக்குத் தெரியாது 
அவன் அருந்திகொண்டு 
இருப்பது அவன் உயிரை 
மட்டுமல்ல.....
அவனுக்கு தெரியாது 
குறைந்து கொண்டிருப்பது 
மதுபுட்டியின் மதுமட்டுமல்ல 
அவனது ஆயுளும் என்று ..
அவனுக்குத் தெரியாது 
அவன் அழித்து கொண்டிருப்பது 
அவனது செல்வத்தைமட்டுமல்ல
அவனது குடும்பத்தின்
எதிர்காலத்தையும் என்று ...
அவனுக்குத் தெரியாது
எரிந்து கொண்டிருப்பது
அவனது வயிறு மட்டுமல்ல
அவனது மனைவியின்
மனமும் என்று

செலவுகள்

ஆடவர்கள் செலவாளிகளே 
தன் கவலைகளையும் ஆடைகளை களைவது போல
கவலைகளை களைவர்ஆண்கள் அதனால நிம்மதியான உறக்கம் 
பெண்கள் சேமிப்பவர் கவலைகளையும் மனதில் புகுத்தி
போர்வைக்குள் ஒளிவது போல மனதில் புகுத்தியதால் விழிகள் அவர்களை தழுவதில்லை விடியலும் அவர்களுக்கு விடிவது இல்லை நிம்மதியா 

இந்தகவிதையும் பாக்யா வந்தன

துயிலும் போது
உன் விரல்
பிடித்த நினைவு
மறக்க முடியாமல்
தவிக்கிறதே அம்மா..

கடைவீதி சென்றால்
தேன் மிட்டாய்
பிடிக்கும் என
வாங்கி தந்த
சுவை இன்னும்
நாவில் இனிக்கிறதே
அம்மா..

நீ கற்று தந்த
பாடங்களை
பிழை இன்றி
பயிலும் போது
நீ தந்த பாராட்டு
உச்சி முகர்ந்து
தந்த முத்தம்
இன்னும் சிலிர்க்க
வைக்கிறதே அம்மா..

அழகான ஓவியங்கள்
சுவற்றில் கிறுக்கிய
பின் அவையே
வண்ண கோலங்களால
நான் வரைந்து பரிசு
பெற்ற போது
மண் வலையல்
பரிசு தந்தாயே
அதன் ஓசை
மனதில் ரீங்காரமாய்
ஒலிக்கிறதே அம்மா...

சுவையாக சமையல்
கற்க எளிமையாக
குறிப்பு தந்து
மனதின் ஆழமாக
பதிந்த்தே அம்மா..

அன் அன்பால்
என்னை வென்றாய்
அம்மா ...

ஒருநாளும் உன்
கரம் என்னை
அடித்ததே இல்லை..
அனைத்தே என்னை
அன்பால் உயர்த்தினாயே
அம்மா...

பாக்யா புக்ல என்கவிதை வெளிவந்தன

அம்மாவும் அப்பாவும் 
உருவத்தில் வேறானாலும்
குழந்தைகளிடம்
அன்பு பாராட்டுவதில் 
சலித்தவர்கள் அல்ல..

அம்மா நிலவை
காட்டி சோறு ஊட்டுவாள்..
அப்பா நிஜங்களை காட்டி
புத்தி உரைப்பார்

அம்மா அன்பின்
பெட்டகம்..

அப்பா அறிவின்
பெட்டகம்...

அம்மா சொந்தங்களை
சுகங்களை சொல்லி
தருவாள்..

அப்பா சோகங்களை
களைய கற்று தருவார் ..

அப்பாவும் அம்மாவும்
இரயில் தண்டவாளங்கள்
போல நாம் வாழ்க்கையில்
வரும் இன்ப துன்பங்களை
கடந்து இனிய பயணம் 
சிறக்க வழிகாட்டிகள்...

விதி

வாழ்ந்தாக வேண்டிய
சூழ்நிலையிலேயே
வாழ்கிறோம்.
ஆமாம் நடுதர
குடும்பங்களுக்கு 
விதிக்கபடாதவிதி

கற்பனை

கற்பனைகளை கடலைபோல ஆழமாக்கி
சாதனைகளை அலைகள் போல அடிக்கி
வெற்றி தோனிகளில் இனிமையாக பயனிப்போம்....

வலிகள்

மறக்க நினைக்கும் வலிகள் 
வந்து வந்து உரசுகின்றன தீச்சுடராக
துயிலும் நேரத்தில் எனை தீண்டும் நேரத்தில்...

கனவு தேசம்

கனவு தேசம் 
என் கனவு தேசத்தில் 
கலகம் இல்லை 
கற்பழிப்பு இல்லை
குறையான குழந்தைகள்
பிறப்பு இல்லை 
ஆண்பெண் பேதம் இல்லை
வலிகள் இல்லை 
வம்பு சண்டைகள் இல்லை
குறைகள் இல்லை 
குற்றம் இல்லை
சாதிமதம் இல்லை
சமத்துவே எல்லை
சங்கீதமே என்
கனவுதேசத்தின் பூபாளம்

புன்னகை

பொன் நகை வேண்டுமா 
புன்னகை வேண்டுமா என்றால்
அன்பே உன் புன்னகை ஒன்றே போதும்
பொன்னகை என்றாவது ஒருநாள் சூடுவேன் 
உன்புன்னகை நொடிக்கொறு முறை சூடி ரசிப்பேன்

மச்சம்

மச்சங்கள் மிச்சங்கள் 
உன் அழகை படைத்த பிறகு 
குட்டி செல்லமே
உன் புன்னகைக்காக

Sunday, 8 June 2014

முகநூல்

எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து
இங்கே முகநூல்
மூலமாக கிடைத்த
முத்தான பல ''நட்பு''
முகம் காணாமல் 
உதவும் உள்ளம் 
இறைவன் தந்த
அன்பு பரிசில் 
நினைகிறேன் 
இன்று .......

தேடல்

எதை தொலைத்தேன்
எங்கே தொலைத்தேன்
என்பதையே மறந்து தேடுகிறேன்
எப்படி தொலைத்தேன்
யாரிடம் தொலைத்தேன்
எங்கேயும் கிடைக்கவில்லை
என்தேடலும் நிறுத்த வில்லை
தொடரும் தேடல்..
அகத்துக்குள் தேடமறந்தேன் ....

வாழ்க்கை

சில பெண்ணுக்கு.. திருமணம் ..ஒரு முட்டு சந்து. 
சில பெண்ணுக்கு .. பொட்டல் காடு
சில பெண்ணுக்கு...இரயில் தண்டவாளம்
சில பெண்களுக்கு...நரகம்
சில பெண்களுக்கு...வழுக்குப் பாறை
சில பெண்களுக்கு ..மட்டுமே அமைதியான சொர்க்கம்

சுற்று சூழல்

#இன்று_உலக_சுற்று_சூழல்_தினம் 
அன்பே இன்று மட்டுமாவது உனக்கான 
கவிதைகளை காகித்தில் வரையாமல் 
என் விழிகளில் தீட்டுகிறேன் ஓவியமாக.

மலடு

இரு(திரு)மணங்களின் பரிசு 
''குழந்தை''
இயற்கையின் சாபமோ 
''மலடு'' 
பல்கலைகழத்தில் கிட்டாத பட்டம்

விடியல்

விடிந்தால் உறவினர் வருகை
அடுக்களையில் அரிசியில்ல 
என்ற ஏக்கத்தில் மனைவி

இரண்டு நாளாக காய்ச்சல் தின கூலி
கூட இல்லையே என தவிப்பு கணவனுக்கு

நல்ல மதிப்பெண் வாங்கி பிடித்த கல்லூரி 
கிட்டும் என்ற கனவில் குழந்தைகள்

மகள் வந்தாள் விதவிதமாக சமைத்து
பரிமாறனும் என்ற பாச உள்ளம் அம்மாவிடம்

இவைகளை ஈடு தர இயலுமா என்ற
சிந்தையோட அம்மாவின் கேழ்வரகு களி சூடாக

அன்பு

அன்பு நல்லது 
நானும் கணவரை 
விழியிலே வைத்து 
விடியும் வரை
காக்கிறேன் தென்றலாக...
சின்ன கிறுக்கலாக....

''ம்'' என்ற வார்த்தைக்குள்
ஆயிரம் கவிதைகள் 
புதைந்து கிடக்கின்றன.

ஞாயிறு என்றாலே
என்னை அறியாமல்
சோகம் வந்து 
சூழ்ந்துக் கொள்கிறது.
உன் நினைவும்
அதன் பிரிவும் .

மனமே

மனமே நீ 
எதை தேடி அலைந்தாயோ
அதுவாக நீ மாறிவிடு 
அவற்றில் கலந்துவிடு
நித்தம் நிர்மலமான உன்
ஜோதியில் அடைக்கலம் 
பெற
அனுமதி தா 
அம்பலத்தானே
பற்று அற்றிருக்க 
பராபரனே
உனை பற்றுகிறேன்
பாரா முகம் ஏனோ
சிவமே...

வட்டம்

அவரவருக்கு ஒரு வட்டம் 
வட்டத்தின் விளிம்பில் 
எண்ணத்தின் சிதறல்
சிதறல்களில்
 சிந்தும் நட்பு புன்னகை..

விருப்பம்

விருப்பங்கள் திசை மாறுகின்றன
அன்பின் வசமாகின்றன
எனக்கான விருப்பங்கள் 
என்னிடம் விடை பெறுகின்றன
விடைப்பிரிய மனமில்லாமல் ..
உனக்கான விருப்பங்கள்
இடம் பெயர்கின்றன 
விலைமதிக்க முடியா அன்பினால் 
என்வசம்....

காலம்

மணிக் கணக்கில் 
பேசுகிறேன் நான் 
உன் மௌனமே பதிலா
நீ என்னை மதிக்கிறாயா
அவமதிக்கிறாயா
அல்லது நேசிக்கிறாயா
''அன்பே''
இது வரமா சாபமா
உன் அன்பில் 
இதையும் நேசிக்கிறேன்...

Wednesday, 4 June 2014

அகம்

எதை தொலைத்தேன்
எங்கே தொலைத்தேன்
என்பதையே மறந்து தேடுகிறேன்
எப்படி தொலைத்தேன்
யாரிடம் தொலைத்தேன்
எங்கேயும் கிடைக்கவில்லை
என்தேடலும் நிறுத்த வில்லை
தொடரும் தேடல்..
அகத்துக்குள் தேடமறந்தேன் ....

சில வரிகள்

சில பெண்ணுக்கு.. திருமணம் ..ஒரு முட்டு சந்து. 
சில பெண்ணுக்கு .. பொட்டல் காடு
சில பெண்ணுக்கு...இரயில் தண்டவாளம்
சில பெண்களுக்கு...நரகம்
சில பெண்களுக்கு...வழுக்குப் பாறை
சில பெண்களுக்கு ..மட்டுமே அமைதியான சொர்க்கம்

Monday, 2 June 2014

உலா

எனை ஆர தழுவும்
தோல்விகள் பல..
அதில் சிக்காமல் 
சிதறாமல்
சிறைபடாமல்
வெற்றி எனும் 
ஏணியின் 
உச்சியில் உலா வர
கை கொடுப்பாயா அன்பே..

மழை

மொட்டவிழ்ந்து 
சிறகை விரித்து 
மேகம் எனும் 
சிறையில் மீண்டு
பூமியை நோக்கி 
விளையாடும் 
குழந்தைகளை 
குளிர்விக்க 
ஆதவனை ஒளித்து
மழையாக வந்தாயோ ...