Friday, 30 May 2014

வாழ்க்கை

மொட்டுகள் அவிழுமோ 
மௌனங்கள் கலையுமோ
நித்திரை நிலைக்குமோ
நினைவில் வாடுமோ
விடியல் தேடும் 
விதியில் வாடும்..
முடவர்களின் வாழ்க்கை.....

உயிர்

என்னை பிரியும்
வரையாவது 
என்னுடன்
பிரியமாய் இரு 
உன் பிரியம்
எண்ணி என் 
உயிர் பிரியும்
வரை வாழ்ந்து
விடுகிறேன்

தொடர்

தெரியாது என்ற 
ஒற்றை வரிகளில் 
உன் எல்லா அன்பும் 
கொட்டி விடுகிறாயே..
மிச்சம் வைக்காமல் ...
தொடரும் தொடர்கதையாக....

மரம்

எத்தனை முறை 
வெட்டி வீழ்த்தினாலும்
மீண்டும் மீண்டும் 
துளிர்கிறாயே 
துவளாமல் 
துடிப்பாக....

முகநூல்

அவளும் அவனும்
தனி தனியாக
முகநூல் 
முகங்களை 
விடியும் வரை 
பார்த்து கொண்டே 
இருந்தால்
என் செல்ல பேரன்
எப்போ ஜெனிப்பான்
என அடுத்த
தலைமுறை ...ஏக்கங்கள்

அன்பு

எத்தனை அன்பு 
கொட்டி வளர்த்த 
அன்னை தந்தைக்கு
வயதான காலத்தில் 
உடன் வைத்து 
உபசரிக்க எல்லா 
பெண்களுக்கும் 
(ஆண்களுக்கும்)
அமைப்பு இல்லை 
என சொல்வதா 
அதை விட பழமை
மாறாத பெற்றோர்கள்
மருமகன் (ள்)வீட்டில்
தங்க தயக்கம்
தவிர்க்காமல் இருப்பதால..

மௌனம்

நித்தம் 
உன் நிசப்தம் 
என் மனதில்
ஏக்கங்களும் 
தாக்கங்களுமாக 
மௌன மொழி 
கலையாயோ..

அனுபவம்

மழலையில்
தவழல் அழகு

பாலகனில் 
குறும்பு அழகு

வாலிபத்தில்
முறுக்கு மீசை அழகு

நடுத்தர வயதில் 
கோபம் அழகு

வயதான பின் உன்
நரை அழகு அவை
அனுபவத்தின் சுவடு

கனவு

துள்ளி திரியும் 
பள்ளி பருவம் 
காணமற் போன 
கவிதை பருவம்
கலைந்து போன 
கனவு திரும்ப வருமா..

Saturday, 24 May 2014

கடல்

விரல்களே இல்லாமல்
என் மேனி தீண்டினாய்...

இதழ்கள் இல்லாமல்
என் பாதங்களை முத்தமிட்டாய்...

கைகள் இல்லாமல்
எனை ஆரதழுவினாய்...

பார்வை இல்லாமல்
என்னுள் பல்லாங்குழி
விளையாடுகிறாய்...

உறவே இல்லாமல்
உரசி பார்க்கிறாய்..

எனக்கும் அவனுக்கும்
இடையில் துள்ளி குதிக்கிறாய்..

உன் அழகில் நான்
என்னை தொலைத்தேன்..

நான் உன்னில்
கரைந்தே போனேன்..

கவித்துவமாக
என்னவன் சம்மதமின்றி..

உன்னை காணவந்த
என்னை களவாடி விட்டாயே
அழகிய கடல் அலையே..

வயிரே இல்லாமல்
சுனாமி என்ற பெயரில்
மக்களை முழுவதுமாக
புசிக்கிறாய் ..
என்பதையே
மறுக்கிறது மனம் ...

ஆனாலும்......

என்னில் நீங்கா
நினைவே...
நீ கடல் அலையே...

மனம்

மனம் அமைதி தேடி
அலைந்தேன் திரிந்தேன்
அமைதி கிடைக்கிறதோ 
இல்லையோ ஆனால் 
நம் கவலை நம் முன் அங்கே
வரவேற்கிறது ...
ஆயிரம் மின்னலின் 
பிரகாசத்தோட......
சில நிதர்சனம்...

கண்ணீர்

கண்ணீரில்
வாடும் 
பெண்டீரை 
கண்டால்
எனக்கு முகம் 
சுளிக்கதான் 
தோனுது...
கண்ணீரில் 
கரைய 
நாம் 
ஒன்றும்
எழுதா காகிதம்
அல்ல ..
கலங்கரை விளக்கம்
காவியம் படைக்க
இயற்கை தூதனின் பிம்பங்கள்
கண்ணீர் என்றால் அது
ஆனந்த கண்ணீராக மட்டுமே..
இருக்கட்டும்...

மொழி

என்ன சொல்ல 
சொல்கிறாய்
என்றே ஆயிரம் 
மௌன மொழி 
பேசுகிறாயே ...
பேசாமடந்தை
போல என் 
பச்சைகிளியே....

கவலை

நான் உன்னை 
மறந்தாலும்
நீ என்னை விட்டு 
பிரிய மனமில்லையோ..

வாடகை இல்லாமல்
குடிகொண்டு மனதில்
செல்லாய் அறிக்கிறாய்...

கண்ணில் படாமல்
கண்ணாபூச்சி காட்டுகிறாய்..

உன்னை தொலைத்து
விட தொலை தூர
பயணம் செய்தாலும்
தொடர்கிறாய் நிழலாக...

உன் நினைவோட
இரவில் தூக்கமும் இல்லை..
விடியலில் விழிப்பதும் இல்லை..

தொலைந்து போ..
மன துயரமே...

தூண்டில் மீனாய்
சிக்கி தவிக்கிறேன்..
உனது பாரம் தாங்காமல்
கரைந்து போ
கண்ணீரிலாவது (கவலையே)..

நிலை

விருப்பங்கள் 
நிலை மாறுகின்றன
நிலை மாறும் முன் 
கிடைக்காத எந்த 
பொருளும் அன்பும் 
ருசிப்பது இல்லை மனதில்....

சிதறல்

எண்ணத்தின் சிதறல்களை
எழுதி வைக்க முடியல ...
விரல் இல்லாதவன்,
வண்ணத்தின் மகிமை விழி 
இழந்தவன் மதிக்கல.
காத தூரம் பயணம் சலிக்கல 
பாதம் இல்லாவனுக்கு...
ஆனாலும் அவர்கள் வாழத்தான்
செய்கிறார்கள் தன்குறைகளை களைந்து ..

தேடல்

தேடும் இடம் 
சரியானால் 
தேவைகள்
நம் கையில்
தவழும் ..
வெற்றி மாலையாக..
அதை தவிர்த்து 
வெற்றி கனி இருக்கும் 
திசை கூட அறியாத
சில ...............
இருக்கிறார்கள்

Sunday, 11 May 2014

அழகு

விரல்களே இல்லாமல்
என் மேனி தீண்டினாய்...

இதழ்கள் இல்லாமல்
என் பாதங்களை முத்தமிட்டாய்...

கைகள் இல்லாமல்
எனை ஆரதழுவினாய்...

பார்வை இல்லாமல்
என்னுள் பல்லாங்குழி
விளையாடுகிறாய்...

உறவே இல்லாமல்
உரசி பார்க்கிறாய்..

எனக்கும் அவனுக்கும்
இடையில் துள்ளி குதிக்கிறாய்..

உன் அழகில் நான்
என்னை தொலைத்தேன்..

நான் உன்னில்
கரைந்தே போனேன்..

கவித்துவமாக
என்னவன் சம்மதமின்றி..

உன்னை காணவந்த
என்னை களவாடி விட்டாயே
அழகிய கடல் அலையே..

வயிரே இல்லாமல்
சுனாமி என்ற பெயரில்
மக்களை முழுவதுமாக
புசிக்கிறாய் ..
என்பதையே
மறுக்கிறது மனம் ...

ஆனாலும்......

என்னில் நீங்கா
நினைவே...
நீ கடல் அலையே...

கடல்

கடல் அலையே
காத தூரம்
உன் நீல நிறமே
நிலையானதே..

நீலவானமும் 
உனக்கு 
சேலையானதோ
எண்ண அலைக்கு 
அடங்காத வண்ண 
அலையே

உன் உடன் பிறப்போடு
விளையாட வந்தாயோ
என் பாதவிரல்
தீண்ட வந்தாயோ..

உன்னில் கரைந்தேன்
காகிதமாக...
கவிதையாக மிதந்தேன்

மரம்

செல்ல மகனே
உன் முகம் 
வியற்வையால்
நனையாமல் 
இருக்க நான்
தென்றலாக 
வருடினேன்
நீ என் கடைசி
மூச்சி வரை
விழியில் வடிந்தோடும்
குருதியினை
துடைக்க மனமில்லாமல்
வெட்டி வீழ்த்தினாய்
(மரம்)
நானும் உன் மறு அன்னையே
உன் அன்னை
உன்னை சுமக்காத
போது நான் தூளியாக
தாலாட்டினேன்
என்பதை மறந்தாயே...

Friday, 9 May 2014

முதிர் கன்னி

முக்காலமும்
உணர்ந்தாலும் 
அவள் முதிர்
கன்னியே 
எக்காலும் 
அவள்
வாழ்வதில்லையோ

மல்லி

மல்லிகை பூ 
வாசம் 
மாறினாலும் 
உன் நினைவில் 
மட்டும் 
விதவையின்
ஏக்கம்

Thursday, 8 May 2014

வண்ணத்து பூச்சி

சொல்லாமலே
சோகம் தீராதே

பகிர்ந்தாலும்
பாசம்
பாதிஆகாதே

நில்லாமலும்
நீங்காமலும்
உன் நினைவே

அழகு
வண்ணத்து
பூச்சியே..
பகிராயோ
உன் அழகை
எனக்கும்

நினைவலை

நினைவலைகள் 
என்னில் 
மன்றாடுகின்றன
உன் கனவுகளை 
கவி மாலையாக்கின
உன் நேசம்
என்னை மரணிக்க
வைக்கின்றன
உன் வாசம்
என்னில்
வசந்தமாகிறது
கனவிலும்...

மழை

மழையில்
நினைவது
சுகம்
உன்
நினைவில்
வாழ்வது
இதம்
உன்னில்
தவழ்வது
மண்ணில்
மலரும்
மலர் போல
இனிமை தரும்

கலை

இயல்பிலே 
எல்லா மனிதனும் 
கலியுக பிரம்மாக்களே...

கலைகளில் 
கை தேர்ந்தவரே..
விரல் பிடித்து 
விடியல் நோக்கி 
வழி நடத்த
ஒரு தோழி (தோழன்)
அமைந்து விட்டால்...

தானம்

தீபாரதனை தட்டுல போடும் காசும் 
வீதில திரியும் பிச்சைகாரனுக்கும் போடும் காசும்

ஒற்றை ரூபாய் நாணயம் .........
பலருக்கு வித்தியாசம் இல்லாமல்

உறவுகள்

உறவுகள் வருகை
உன்னதமனாது
பரவசமானது
ஊக்குவிப்பது 
நாம் தேக்கி
வைக்கும் பாசத்தை 
படையல் வைப்பது
கடல் அலை போல 
அன்பின் அலை 
கனிவின் கதம்பமானது
பாசத்தின் பகிர்வு
அள்ள அள்ள
குறையாத அன்பின்
ஊற்று...சுவாச காற்று...

கோபம்

உன் அன்பின் 
உச்சமோ 
என்னிடம் காட்டும் 
கோபமும்

கடல்

கடலின் 
ஆழம் 
செல்ல செல்ல
மயான அமைதி
இயற்கையின்
'பேரிறைச்சல்''...
மட்டுமே

நம் அன்பிலும் 
சலசலப்பு இல்லை
சலனமும் இல்லை
புன்னகை மட்டுமே
பல இடர்களிலும்
பேரனாந்தமோ.

என் கவிதை

என் கவிதை மங்கையர் மலரில்

மகள்

எத்தனை விருந்து
சுவைத்தாலும் 
அம்மாவின் 
கைமணம் 
மகளுக்கு 
மாறாமல் 
இரட்டிபாக
கிடைப்பது
அம்மாவின் 
மறுஅவதாரம் 
மகளோ

Thursday, 1 May 2014

கவிதை

மங்கையர் மலரில் வந்த என் கவிதை