Wednesday 29 October 2014

விடியல்

விடியல் வரை விழித்திருந்தேன் 
உனைக் காண விடிந்து வராமல் 
ஏமாற்றினாயே.. என் இளங்கதிர் சூரியனே..

திருஷ்டி

 கருமேகமே உன் நிறம்
 கொஞ்சம் கடனாகத் தாயேன் 
 என் கண்மணிக்கு
 திருஷ்டி பொட்டு வைக்க...

தென்றல்

அசைந்தாடும் தென்றலும் அமைதி எனும் போர்வைக்குள் ஆள் அரவமற்ற அறையில் இருளின் நர்த்தனத்தில் நடுநிசையில் இந்த மணிகூண்டு மட்டும் காலம் எனும் தன் காதலன் வரவுக்கா நொடிப் பொழுதும் அயராமல் விழித்துக்கொண்டே..,

கீற்று

மழைகீற்றுக்குள் நீந்துகிறது.
காதல் என்னும் அன்பு பிரவாகம்
யாரையோ நோக்கி மௌனமாக....

இயற்கை

மலரும் முன் மொட்டுகுள் வாசத்தை வைத்தவன் எவனோ.
மழைவரும் முன் மயிலுக்கு ஒருவாசம் எப்படி வருதோ..
நிலத்தில் மலரும் முன் செடிகளும் ஒரு வாசத்தோட..
உன் அன்பின் வாசமும் சுவாசமாகவே என்னில் ..
அட டா இயற்கை அழகை ரசிக்க இந்த ஆயுள் போதுமோ..