Thursday, 20 March 2014

சுவை

கடந்த
கால 
சுமைகள் 
கூட 
நிகழ்காலத்தில் 
இனிமைதான்.....

தேடல்


வளையல்

கண்ணாடி வளையலும்
பெண் மனதாய்
புலம்பும் ஓசைகள்
ஒரு கணம் இனிமையாய்
மறு கணம் வெறுமையாய்
சில கணம் தனிமையாய்
ஒலிக்கிறது

தங்க மங்கை மாத இதழ்


நட்பு

தோளிலே சாய்ந்தேன் ......
தோழமை துளிர்த்தது..
மனம் விட்டு பேசினேன் ... 
சோகமெல்லாம் மறைந்தது .

சாலையோர சங்கீதங்கள்

சாலையோர சங்கீதங்கள் ....

கிராமத்து சாலையில்
பசுமை படர்ந்த மரங்களின்
வண்டின் ரீங்காரம்...

வண்ண மலர்களின் பரிசம்
வாழையின் சுவாசம்
புட்களின் பனிதுளி...
ஏரிகளில் நாரையின் அழகு
கொக்கின் ஒற்றைகால் தவமும்

பாட்டியின் வெற்றிலை
பாக்கு இடிக்கும் இசையும்
உழவரின் காளைகளில்
கழுத்து மணி ஓசையும்

மழலையரின் ஆட்டம் பாட்டமும்
நான் வாழ வந்த
ஊரின் சுவாசங்கள் இவை....

நகரத்தின் வாசல்
வளரும் சூழல்
புகையின் பூமழை
வண்டிகளின் வரிசையும்

வானுயர பறக்கும்
வான ஊர்தியும்..
வயதானவர்களும்
தன்பணிக்கான ஓட்டமும்...
வெயில் தாக்கமும்
மரங்கள் மரித்த நிலையில்...

விளங்காத வெட்டிபயல்களின்
காட்டம் கிண்டலாக
பதாள சாக்கடை
தொல்லை துர்நாற்றம்
மட்டும் பொதுவாக
நகரம் கிராமங்களில்..

அவசர பிரிவின் வாகனம் ஒசை
காதை கிழிக்கும்
நிமிடத்திற்கு ஒன்றாக
விபத்திலா நகரம் எப்போது
வீதிகளின் விளிம்பில்
மனிதனின் விதி
சாலையோர சங்கீத்ததில்

வாசம்

கல்லில் இல்லா வாசம் ...
கவிதை மழையே
உன்னின் சுவாசம்
இதயத்தின் வாசம்
காற்றில் வரும் கீதம்
மலரின் நாதம்
மனதின் மயக்கம்
எல்லாமே கவிதையில்
சங்கம மாகிறதே...
கடலும் அலையும் 
கவிதையின் வரிகளில் 
புதுபிக்க பட்டனவே..

வண்ணம்

வண்ண 
வேர்கள்
மின்னல்..
வானத்து 
மலர்கள்
மின்னல்
மண்ணின்
தாகம் மழை..
மேகத்தின் 
வர்ண ஜாலமோ
வண்ண கோலமா..நீ

மழை துளி

மண்ணில் விழாத
மழைதுளி காற்றில் 
கறைவதுண்டு ....
நம் இன்ப
துன்பங்களுமே 
அன்பில் கறைந்து போகின்றன.

Wednesday, 19 March 2014

வீடு

வீடு
நான் வசிக்கும் வீட்டில்
வாடகை இல்லாமல்
குடியேறிய சுகவாசியோ..
வாரீர் செலவிலா விருந்தினரே
காலையில் காகமும்
முன் பகலில்
வண்ணத்து பூச்சியும்
பிற்கலில்
பசுவும் கன்றும்..
எல்லா நேரங்களிலும்
அணிலும்அதன் குடும்பமும்
பல்லியும் எறும்புகளின்
வரிசையும்
வீட்டு எதிரில்
எலியும்பூனையும்
வண்டுகளின் ரீங்காரமும்
தெருவிளக்கின் ஓரம்
ஒரு ஆந்தையும் அதன் அலரலும்
அமைதியின் போது
குயிலும் மைனாவும்
சிட்டுகுருவி சில
விருந்தினராகவும்
நான் இல்லாநேரதில் காவலாக
சிலந்தியும் காவலாளியாக
என் வீட்டு விருந்தினர்

அக வரிசை

அகரவரிசை

Add caption
அனுபவம் அழகு
ஆசை சுவடு
இசை இனிமை
ஈகை நிலை
உண்மை நிலைத்தல்
ஊக்கம் வரவு
எல்லை தடை
ஏக்கம் எளிமையல்ல
ஐயம் எதிரி
ஓட்டம் வாழ்க்கை
ஔவை போல ஞானமும்
ஆயுதம் போல முற்று
பெறாமல் இருப்பதே வாழ்க்கையானதோ .......

சிறகு

சிறகு


எனது கற்பனைஎனும்
தொட்டில் குழந்தை ..
கவிதை மகள்
ஆயிரமாயிரமாக
தங்க பேழையில்
கூண்டு கிளியாக
சிறகொடிந்து துவண்டுள்ளன...
எவன் வருவானோ..
கவிதைக்கு உயிர் கொடுத்து
இறகை துளிக்க விட்டு பறக்க விடுவானோ....

புத்தக மெனும் மனமேடையில் ....

வாழ்க்கை

நேற்றைய இன்பமும் 
இன்றைய துயரமும் 
நாளைய விடியலும்
நிலையல்ல....
என்ன வினோதமான வாழ்க்கை பயணம்

என் படைப்புகள் புக்ல வந்தவைபாசம்

தந்தை மகளுக்காக
விரல் பிடித்து நடைபயில தந்தான்
விரும்பியதை எல்லாம் 
பாசமாக பரிசளித்தான்
மகள் வளர வளர
அவள் ஆசைகளும் வளர்ந்தன
பஞ்சு மிட்டாய்
குச்சி மிட்டாய்
பாட்டாடை தாவனி
தங்க கொலுசு வைர வளையல்
பள்ளி படிப்பு பட்டபடிப்பு வரை
சின்ன சின்ன ஆசைகளை
அள்ளி தந்த தந்தை
ஏனோ மகளின்
பருவ வயதில்
மலரும் அன்பு
காதலுக்கும் மட்டும்
''தடையாகிறானே''...

மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

மயங்கினேன்
உன் பிம்பம் கண்டு
மாலை நேரத்து ஆதவனே
கடலலையின் ஒளியும் போது
சாலையோர விண்ணலாவிய
மரம் கண்டு
நட்சத்திர கூட்டங்களை
சேலையாக உடுத்திய
விண்ணை பார்த்து வியந்து
மாலை நேர மயக்கதில்
அந்தி சாயும் அவசரவேலையில்
அலை அலையாக
கூடு வந்து சேரும்
பறவை இனமும்
மயிலும் குயிலும்
இசைபாடும் மாலை
நேரம் மண்ணின் இனிமை சேரும்
சின்ன சிறு சிரார்கள் துள்ளி
விளையாடும் நேரமும்
மாலையில்தானே
சிலு சிலு தென்றல்
வருட உன் கரம் பிடித்து
கடல் அலையில் விரல் பதித்து
காதல் தடம் பதிக்க
வரும் இந்த மாலை
நேரம மயக்கம்
கன நேரத்து
மலர் வனம் ....
நெஞ்சில்

நிலவு

நிலவொளியில் குளிர்காய முடியுமோ...
சூரிய ஒளியில் விளக்கேற்ற முடியுமோ...
கல்லில் நார் உறிக்க முடியுமா
கடலில் அலை பிரிக்க முடியுமா.
கள்ளி பாலை பருக முடியுமா...
நீ யின்றி என் வாழ்க்கை இனிக்குமா.

Monday, 17 March 2014

நான் மங்கையர் மலரில் எழுதியது இவை

Saturday, 15 March 2014

என் பெயர் முதல்முறையாக பெண்கள் மலரில்

ஆசை
முடவனுக்கு கொம்பு தேன் அரிது
ஏழை மாணவருக்கு மருத்துவ கல்வி அரிது
விதவை தாய்க்கு மழலை அரிது
முதிர் கன்னிக்கு வரதட்சனை இல்லா வாழ்வு அரிது
பொறியியல் மாணாக்களுக்கு இப்போதையநிலையில வேலை அரிது
பதின் காதலில் பாசம் அரிது
மின்சாரம் இல்லாநிலை அரிது
கூட்டு குடும்பம் அரிது ...

என் எழுத்து பெண்கள் மலரில் வந்து இருக்கு இன்று 

எண்ண குவியல்

எண்ணகுவியல்


எண்ண குவியலே
கவிதையாக வருவாயோ

கருவிழி பிம்பங்கள்
கற்பனையாக அதில் கலக்கிறதோ..

காலத்தின் சிதறல்கள்
விடுபட்ட உளரல்கள்
எல்லாமுமே கலவைகளால கற்பனைகளால ..

கவிதைகளால வார்த்தைகளில்
 முட்டிமோதி எட்டும் எட்டாமல்
விட்டு போகமல் பூமாலையாக
கோர்க்க பட்டு பாமாலையில்
தொடுத்து கவி மாலையாக ...

தமிழே உன்னில்
சிதறியஎழுத்துகளை
கோர்த்து உனக்கே தந்தேன் ...
படையலாய்...பதமாக இதமாக சுகமாக சுவையாக

Friday, 14 March 2014

அம்மா

அம்மாவின்
பரிவு
நாம் விரும்பிதை
கேட்காமல்
தரும் போது
வானாளாவி
தோன்றும்
அவளின் அன்பு ...சசிகலா