Sunday 31 May 2020

காசி யாத்திரை 3




#காசியாத்திரை3 காசியின் பெருமைகள்:

முதலில் காசியில் மூன்று கண் கொண்ட சாட்சி விநாயகர் இருக்கிறார்.  அவரே நம் பாவ புண்ணியத்தை பற்றி சாட்சி சொல்லும் மூன்றாம் கண் திறந்து சொர்க்கம் கிடைக்க.  வழி வகுப்பாராம். அவரை வணங்கும் போது  நல்லது நடக்குமாம்.

காசி இந்துக்களின் புனிதத் தலம். மிகப் புராதனமான நகரம். ஆதிசங்கரர், ராமானுஜர், குமரகுருபரர், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் என பலரது வருகையால் பொலிவுற்ற புண்ணிய பூமி. கிறித்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை, இஸ்லாமியர்களின் மெக்கா யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது காசி யாத்திரை. காசி நகரத்தின் வடக்கிலிருந்து வாரண் நதியும், தெற்கில் அஸ்ஸி நதியும் க்ங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால் வாரணாசி என்ற பெயரும் இந்த நகருக்கு உண்டு.
காசி விஸ்வநாதர் ஆலயம்

முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் காசியும் ஒன்று. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையாக கோயில் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. குறிப்பாக இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் அகில உலகத்தும் உணவளிக்கும் அன்னை அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள். காசி விஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம் செய்யலாம் என்பது மற்றொரு சிறப்பு.
அன்னபூரணி ஆலயம்

காசியில் அவசியம் தரிசக்க வேண்டிய முக்கியமான ஆலயம் இது. இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

காசி விசாலாட்சி ஆலயம்

காசி விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் வேறு பகுதியில் உள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். காசி நகர் முழுதும் இந்த அன்னையின் ஆட்சிதான். இக்கோயில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தஜாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. இது அன்னையின் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கால பைரவர் ஆலயம்

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.

கங்கை

கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில் குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் ”கங்கா ஆரத்தி” மிகச் சிறப்பானது. இந்தியாவில் ஓடும் நதிகளிலேயே மிகப் புனிதமான நதி கங்கை.

”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. 

ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி

கங்கை மிக புனிதமானது 
எவ்ளோ பேர் அதில் இறந்து மிதந்தாலும்
அந்த தண்ணீரை நாசாவில் ஆராய்சி செய்த பொழுது சுத்தமாக இருந்ததாக சொல்வார்கள் 

தற்கொலை செய்யவேண்டும் என்று கங்கைக்கு சென்று அதில் விழுந்தால் கூட அவர்களை அப்படியே தூக்கி வெளியே வீசிவிடுவாள் கங்கை தாய்

64 காட் எனும் கோயில்கள் கங்கை கரையில் உள்ளது

அதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் 
இன்றும்கூட  நாரதர் காட் என்னும் கோவிலில் இரண்டு பேர் ஒன்றாக குளிக்க சென்றால் அவர்களை அறியாமல் சண்டை போட்டு கொள்ளுவார்கள்

அதன் பிறகு அருகில் இருக்கும் விநாயகர் காட்டில் போய் குளித்தால் சண்டை சரியாகும் என்பார்கள் 

ஒரு முறை அனுமன் சிவன் சிலையை எடுத்துவர  காசிக்கு சென்றார் 
அனுமன் காசியின் காவல் தெய்வமாம் பைரவரிடம் அனுமதி பெறாமல் லிங்கத்தை எடுத்து வந்ததால் அனுமனை சொதித்து லிங்கத்தை  சிறுவன் வடிவில் வந்து பிடிங்கி கொண்டார் அந்த கோவில் தான் பிச்சாட்டூர் சிவன் கோயில்
அந்த லிங்கத்தை அனுமனுக்கு காட்டி கொடுத்தது ஒரு கருடன்
அதனால் கருடனுக்கு சாபமிட்டார் பைரவர்
அன்று முதல் இன்று வரை காசியில் எந்த இடத்தில் கருடன் பறக்காது 
ஊரை சுற்றி நாய்கள் இருந்தாலும் அவைகள் குறைக்காது.

அப்படி போவது என்றால் 
முதலில்  இராமஸ்வரம் சென்று  அங்கிருந்து மண் எடுத்து கங்கையில் கரைத்து மீண்டும் கங்கையில் இருந்து மண் எடுத்து வந்து இராமஸ்வரத்தில் கலக்க வேண்டும்
இது தான் காசி யாத்திரை என்பார்கள் 

முக்தி தரும் காசி:

இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம். ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம் என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள். வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில் கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற பெயரும் உண்டு. காசியின் சிறப்புகள்.

அன்னபூரணி ஆட்சி :

காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும் இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில் தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார். இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும், பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கங்கா ஆரத்தி :

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று ‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு முடிவடையும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயம் :

காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம். இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது. தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம். முன்பு..
இப்போது கம்பி போட்டதால் அபிஷேகம் மட்டுமே செய்யலாம் தொட்டு வணங்க. கை எட்டாது. இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.

புண்ணிய தீர்த்தம் :

காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி - குண்டலம்; கர்ணிகா -காது).

‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

காசியின் காவல்தெய்வம் :

காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர் அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும் நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில் ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான் ‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.


0 comments:

Post a Comment