Wednesday 24 September 2014

வெற்றி

தோல்விகள் எல்லாம்
 உதிர்ந்த மலர்கள் ஆனாலும்.
 அவைகளை மாலைகளாகத்
 தொடுப்பதே .. வெற்றிதானே.!!

விடை

வெறுப்புகளுக்கு இடம் தரும் 
தருணம் விருப்பங்கள்
 விடை பெரும் சொல்லாமலே

நொடி

கோபத்தின் கடைசி 
நொடியும் இன்பத்தின் 
முதல் நொடியும் ஒரு 
இழை இடைவெளிதான்.,

சுகம்

உறுத்தலும் சுகமானதே ..
நம்மை சிந்திக்க
வைக்கும் வரிகளான போது....

வெற்றி

தோற்றுக் கொண்டே 
இருப்பதும் மன நிறைவே...
 வெற்றிக்கு அருகில் நான்..

மௌனம்

உன் மௌனத்தில் 
ஆயிரம் உண்மை 
தன்னகத்தே
தவம் கிடக்கிறதோ..

வண்ணத்துப்பூச்சி

மின்னலாக வருகிறாய்
எதையோ தருவது போல..
பாவனை செய்து ஏதும் 
தராமல் தவிக்க விட்டு 
போகிறாயே ...
வண்ணத்துப்பூச்சியே..
சசிகலா

விதி

நிழலாக வருகிறாய்
நான் நினைக்கும் முன்
அணைக்கிறாய் ..
அன்பாக இருக்கிறாய் ..
அமுதமாக இனிக்கிறாய் ..
எல்லாமாக மாறி
ஏக்கங்களுக்கும்
தாக்கங்ளுக்கும் தானே
பொறுப்பாக மாறி
புது தெம்பளிக்கிறாய்
என் (விதியே...)
சசிகலா

அனாதை

வானவில்லை வலைத்து
ஊஞ்சல் விளையாடலாமா.!
மழையைக் கயிராக திரித்து
புன்னகை பட்டம் விடலாமா.!
மலர்களைக் கோர்த்து
மாளிகை கட்டலாமா.!
கடல் அலையில்
கோலம் வரையலாமா..!
விண்மீன்களில் அழகாக
வளையல் செய்யலாமா.!
நீலவானில் நீந்தலாமா
தோணி கொண்டு.!
நீங்கா துயர்கொண்டு
வளம் வரும் "அனாதை" எனும்
மழலைகளோட கரம் கோர்த்து

Friday 12 September 2014

எழில்

தொட்டு விடும்
தூரத்தை எட்டி
பிடிக்க எத்தனிக்கும் 
எழிலான இயற்கை 
மங்கை நானே

புன்னகை

உன் புன்னகை
என் இதயத்தில் 
ஏதோ செய்கிறது 
இனம் புரியாத மகிழ்வு
நீர் குமிழாக 
பறக்கிறது தினமும் 
நீ பால்வாடி போகும்
போது எனை கண்டு கண் சிமிட்டுவது....

வசம்

வானமும் வசப்படும்.
துன்பங்களை
தவிடுபொடியாக்கும் 
மனம் இருந்தால்!

நிறைகள்

குறைகள் இருக்கத்தான் 
செய்கின்றன..
எண்ணிலடங்காமல்,
அதற்கு உயிர் தராமல் 
நிறைகளை நேசிப்போம் நிதமும்

நீர் ஊற்று

மகிழ்ச்சி மனதின் நீர் ஊற்றுப் 
போல சுரந்துக் கொண்டே இருக்கும் 
அதை நாம் கவனிப்பதே இல்லை.

சூழ்நிலை

சுற்றித் திரியும் சாகசப் பறவைகளும் 
சிலநேரம் சூழ்நிலை கைதியாகுமோ....

மனம்

தேடலின் முழுமை வெற்றி.
வெற்றிப் பெற்றாலும் தேடலிலே மனம்

தோப்பு

ஒற்றை பனைமரமாக 
ஓங்கி வளர்வதைக் 
காட்டிலும் கூட்டாக கூடி 
தோப்பாக வளரும் சிறு
 மரங்களே சிறப்போ....

சிவனே

காத்திருந்துக் காந்திருந்து 
கருணைக் கடலே...
கற்பூர ஜோதியில் உனை
கண்டதில் கவலையெல்லாம்
காற்றினிலே கலந்திட்டதோ 
சிவசக்தி நாதனே....
மனம் நிர்மலமானதே ...
நின் ஜோதியில்..

மனம்

மனதின் மகிழ்வான தருணம் 
குழந்தைகள் கூடி விளையாடும் இடமே..

நெருடல்

பட்டென போட்டு ஒடைக்க 
கவலை ஒன்றும் காண்ணாடி அல்லவே ..
மனதை நெருடும் முள் போன்ற மோசமானது....

பட்டாம் பூச்சி

தித்திக்கும் தென்றலாக ..
மென்மையான மாலையில் 
மல்லிகை மணத்தில் மனம் 
வருட தினம் தினம் வரும் பட்டாம்பூச்சியே....

தடைகள்

நினைவுகளும், கனவுகளுமே ..
வான் உயர்ந்து உலா வருகிறது 
தடையின்றி..

அன்பு

அன்பை அள்ளித் தாங்க..
பண்பை பறைச் சாற்றுங்க..
கோபத்தை தீயிலிடுங்க....
வன்மத்தை விட்டுவிடுங்க....
இன்பத்தை பகிருங்க..
கருணையை வளருங்க...
பசுமையை விதையுங்க...
துன்பத்தைத் தள்ளிவிடுங்க.. 
மனதில் குழந்தையாக 
வளம் வாங்க இன்பமாக வாழ

மனம்

அழகால என்ன இருக்கு. 
மன அழகே சிறப்பானது 
வலிமையானதும் கூட...யாருக்கோ

காத்தாடி

நூலும் வாலும் அற்ற 
காத்தாடியாக மனம்
 சில நேரம் எதை நோக்கியோ பயணிக்க

தலைமுறை

தலைமுறை இடைவெளி 
இல்லாமல் தாத்தா பாட்டி 
மழலைகளோடு மனம்
 விட்டு விளையாடுங்க

தொல்கப்பியம்

தொல்காப்பியம் பொருளடக்கம்
=================================
1.சிறப்புப்பாயிரம் 
=================
வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.

2.எழுத்ததிகாரம்
==================
1.நூல் மரபு
2.மொழி மரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகை மரபு
6.உருபியல்
7.உயிர் மயங்கியல்
8.புள்ளி மயங்கியல்
9.குற்றியலுகரப் புணரியல்

3.சொல்லதிகாரம்
=================
1.வேற்றுமையியல்
2.வேற்றுமை மயங்கியல்
3.விளி மரபு
4.பெயரியல்
5.வினையியல்
6.இடையியல்
7.உரியியல்
8.எச்சவியல்

4.பொருளதிகாரம்
=================
1.அகத்திணையியல்
2.புறத்திணையியல்
3.களவியல்
4.கற்பியல்
5.பொருளியல்
6.மெய்ப்பாட்டியல்
7.உவமயியல்
8.செய்யுளியல்
9.மரபியல்

கனம்

கானத்தில் கலந்திடு மனமே...
நிதானத்தில் நிலைத்திடு மனமே ..
மௌனத்தில் மறைந்திடு மனமே..
தியானத்தில் தொலைந்து போ தினமே...
சுகங்களும் துக்கங்களும் தொடரும் முன் .

சிறிய அன்னை

தோள் சாய நினைத்தேன் 
தேளா கொட்டினாய் நீ
சிற்றன்னை என்பதாலோ......

வசந்த முல்லை

வறுமையில் வாடும் வசந்த முல்லைகள்... 
பள்ளியில் மாத கட்டணம் கட்டாமல்,
இரவு வயிறாற உணவு இல்லாமல் ,
பிறந்த நாளுக்கு புதிய ஆடை 
அணியாமல் வறுமையின்
''தத்து'' பிள்ளைகளாக ..வளரும் மொட்டுகள்
சாலையோர சங்கீதங்கள் இவை..

மழலை

மழலைகள் தவழும் வீடும்
தோட்டத்தில் மலர்கள் வாசமும் ஒன்றே...

தவறு

தவறு வராதா ஏதும்?
என மனதில் கேள்வி
விக்கி நிற்கவே....தயக்கதில் 
தடுமாறினேன்.... மனதளவில்

மனம்

மௌனத்தில் விளையாடும் மனமே!
கொஞ்சம் மழலையிடம் விளையாடேன் ....தினமே

தினம்

தித்திக்கும் தினமாக நித்தம் வருமோ
தோல்விகள் அதில் மறையுமோ...
வெற்றிகள் விளையாடுமோ ..