Monday 20 April 2020

தியானம் பழகு

1..தியானம் முதல்பகுதி...வெற்றி உன்னை தேடுகிறது. ஆம் நாம் செய்யும் செயலினால் ஏன் எந்த செயலும் செய்யாத தவம் மட்டுமே செய்யும் சித்தர்களுக்கும் வெற்றி கிட்டுகிறது.. தவம் மனஅலைகளை நேர் கோட்டில் சீர் அமைத்து  அவைகளை எண்ணங்களுடனும் எதார்த்ததுடனும் ஒற்று போகிறதா முரனாகிறதா... என்று உற்று நோக்கி ஊடுருவி கவனித்தலே தவம். முதலில் ஓரிடத்தில் ஒரு நிமிடம் ஒன்றாத போக்கு மட்டும் சரி செய்து விட்டால் மற்றவை எல்லாமே தானே நடக்கும். ஒரு இருக்கையை தேடி அமர்ந்து கொள்ளுதல். தினமும் காலை மாலை ஒரே நேரத்தில் செய்வது குறிப்பிட்ட நாள் தொடர்வது. பின் நாம் விட்டாலும் அது நம்மை விடாது தொடரும் கருப்பாய்.. கருவிலே திருவுடைய மகனாக திகழ்வோம்.. ஆம் நமக்கான எண்ண அலைகள் ஓர் நேர்கோட்டில் வர துவங்கும். எதிர்மறை முதலில் விலகத் துவங்கும். வான் காந்த பேராற்றல் நம்மோடு பேச துவங்கும். நேர்மையான செயல் எல்லாமே தானே நடக்கும்.. இன்னும் இன்னும் பெரும் அழகியல் நடக்கும்
தவம் எப்படி செய்ய வேண்டும்?
தவம் ஏன் செய்ய வேண்டும்?

இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.

கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.

மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!

ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

திருமந்திர பாடல் – 2816

இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.

நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
 மகரிஷி கண் திறந்து செய்யும் தியானம் பற்றி சொல்லிருக்கிறார். அது தீபஒளிதியானம்  கண்ணாடி பயிற்சி ஆகும்.
1) காலை மாலை இருவேளையும் சுமார் இருபது நிமிட நேரம் தவம் செய்ய வேண்டும்.

2) இடைப்பட்ட நேரத்திலும் அவ்வப்போது சிறிது நேரம் தவம் செய்ய வேண்டும்.

3) உண்ணும் போதும் பிற புலன் அனுபோகத்தின் போதும் ஆக்கினை

மற்றும் துரியத்தில் உயிரின் அசைவை கவனிக்க வேண்டும்.இது அறிவை அயராத விழிப்புநிலையில் வைத்திருக்க உதவும்.

4) பரபரப்பாக செயல்படுவதையும், உரக்கப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

5) மௌனவிரத காலங்களில் அதிகமாக தவம் செய்யலாம்.

6) மனதில் பேராசை, சினம், வஞ்சம், பொறாமை, வெறுப்பு தற்பெருமை,அவமதிப்பு, முறையற்ற பால்கவர்ச்சி, அவசியமற்ற பயம், அதிகாரபோதை, ஆகிய தீய உணர்வுகளும் எழாமல் மனதின் தூய்மையை காத்துக்கொள்ள வேண்டும்.

7) அறிவை இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும், உடல் மன நலத்திற்கான அறநெறி ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டும்.

8) ஒருநாள் நொடிப்பொழுதில் விண்(உயிர்) துகள்கள் அகக்காட்சியாக தெரியும்.உள்ளுணர்வாக(Intuition)  தத்துவங்கள் யாவும் விளங்கும்.

9) மனம் நிறைவு பெற்று அமைதி நிலை அடையும் இன்னும் தொடரும் 

4 comments:

  1. இலக்கம் ஆறில் சொல்லப்பட்டது சில எம்மிடமும் உண்டு மாற்ற முயல்கிறேன்.

    அந்த சில...
    01. சினம்
    02. வெறுப்பு (துரோகிகளால் ஏற்பட்டது)

    ReplyDelete
  2. நன்றிங்க சினம் நமது குணம் அது மாற்றிட கருத்து பரிசீலனை தேவையே வெறுப்பு இயலாமை நம்பிக்கையை இழப்பது இதையும் பொறுமையால் வெல்லலாம் நன்றிங்க

    ReplyDelete
  3. இவைகள் எதுவுமே அறியாதவர்கள் பலர் உள்ளனர்... ஆனால், நிம்மதியாக உள்ளனர்... அவர்கள் யார்...? தேடினால் கிடைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. மன நிம்மதி கிடைக்க நிறைவான போதுமென்ற மனம் போதுமே சகோ நான் நிறைவாகவே இருக்கேன் அதிலும் இந்த நோய் தொற்று வராமல் இருக்கும் ஊரடங்கில் பல ஏழைகளுக்கு உதவி கிடைக்குமிடத்தில் வாங்கி தந்துநிறைவு பெறுகிறேன்.

      Delete