Wednesday 6 May 2020

கிணற்று நிலா

தினம் தினம் விடிய விடிய பேசும் நிலா அதுவும் இப்போதைய சித்திரா பௌர்ணமி நிலா என்னோடு மழையில் விளையாடி கூட்டாஞ்சோறு சாப்பிட்டநிலா.. விளையாட மறுப்பதேனோ.. கேட்டுச்சொல்லடி மஞ்சகாட்டு மைனாவே..


பௌர்ணமி நாளில் 
கிணற்று நிலாவை
வாலியில் இரவெல்லாம் 
நீரோடு வாரி இறைத்த
நிலவு இப்போதெல்லாம் 
கையிலும் வருவதில்லை..
அந்த நாட்கள் பசுமையானதே..

சித்திராபௌர்ணமியில் கலவை சாதம் செய்து வீட்டு முற்றத்தில் வெளிர்நில வெளிச்சத்தில் வகைவகையான சாதங்கள் வாசனை அள்ள அள்ள குறையாத உணவும் பொறியலும் வடைகளும் அம்மம்மா என்ன சுவையான நினைவுகள். 

புளி சாதம் தோட்டத்தில் விளைந்த தக்காளி சாதம் எலுமிச்சை சாதம் கொத்தமல்லி சாதம் ..வானவில்லின் கலவையாக மாறும் அம்மா பரிமாறும் விதத்தில் வாழையிலையில் அழகில் உணவுவகைகள்..
அம்மம்மா சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுது.. வீட்டில் அத்தனைபேருக்கும் ஒவ்வொருவரும் கவளம் அப்பா ஊட்டி விடுவார்.  குடும்பமே கவிதையாக மாறும். அந்த சமையத்தில் ..
தாத்தா பாட்டி அக்கா தங்கை தம்பி அப்பா அம்மா. பக்கத்து வீட்டு மாமா மாமி எல்லாருமே ஒன்றாக சாப்பிடுவோம்..அந்த சித்திரை பௌர்ணமி இதோ சில மணி நேரத்தில் நம்மை வந்து விடும். 
ஆனால் இத்தனை சொந்தங்களை எங்கே தேடுவேன்.. மறந்தவர் மறைந்தவர்.. பணத்தால் உறவை விலக்கியவர் இப்படி பட்டியலில் விலகிய உறவுகளே நவீனத்தில் விஸ்வருபமாகிறது.. 

நம் பிள்ளைகளுடன் மட்டுமே பௌர்ணமி கொண்டாடுவோம்.. நீங்களும் வாங்க அன்பு உள்ளங்களே.. அதே அம்மா வீட்டு கிணற்றில் நிலவை ரசிக்கலாம்.. ஆழ்துளைகிணறு அதிகம் பெருகி அதில் இடர்களும் நிலத்தடீ நீர்மட்டமும் குறைந்ததே மிச்சம் ..
நிலா வந்து விரலுக்கு மோதிரமாக மின்னிய போதும் 
இந்த நிலா மலைக்கும் தென்னைக்கும் குளுமையை பரிசளித்த போது. 

8 comments:

  1. நிலாக்கதைகளோடு நிலவி வரும் கட்டுரை அருமை...

    தொடரட்டும் மோதிரம் சூட்டும் விழாக்கள்.

    ReplyDelete
  2. முடிவில் உள்ள படம் மிகவும் கவர்ந்தது...

    ReplyDelete
  3. பிறருடைய தளத்தில் ஃபாலோவர் லிஸ்டில் சொடுக்கி இணைந்து கொண்டால் தங்களது டேஷ்போர்டுக்கு பதிவுகள் உடனுக்குடன் வரும் நானும் தங்களது தளம் இப்படித்தான் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பிறரின் தலம்தெரியலங்க தேடுகிறேன்

      Delete
  4. உங்கள் தளத்தில் இருக்கிறதே Unfollow இதில் நானும், புலவர் ஐயாவும் ஜாய்ண்ட் செய்து இருக்கிறோம்.

    இதேபோல் பிறர் தளத்தில் நீங்கள் போய் சொடுக்கி இணைந்து கொள்ளவும்.

    ReplyDelete