Thursday 7 May 2020

சித்திரா பௌர்ணமி

சித்தமெல்லாம் சிவமயமே அது பெரியவர்களுக்கு சிவனை வழிபடுபவர்களுக்கு ..

ஆனால் குழந்தை மனம் கொண்ட எங்களுக்கும் குழந்தைகளுக்கும் தி.மலை எப்போது திருவிழா வரும் வசந்த உற்சவம் என்று உற்சாகத்தோடு காத்திருப்போம்.  
ஆம் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம் மனதில் "தில்" "தில்"தில்லானா பாடும்.. வசந்த உற்சவத்தில் பத்து நாட்கள் நடை பெறும். 

சாமி அம்மன் வெட்டி வேர் மண்டபத்தில் ரத்தின அலங்காத்தோடு வளரும் நிலவொளியில் வர்ணிக்க வார்த்தைகளே இல்லா அளவிற்கு அழகாக மிளிரும் காண கண்கோடி வேண்டும். 
மூன்றாம் நாளிலிருந்து பூ கொட்டும் பொம்மை ஒன்று அலங்கரித்து சிறு பெண்போலவே நகை அணிந்து உடை அணிந்து பூ மாரிப் பொழியும் தினமும். இதில் ஒரு நாளும் வாணவேடிக்கை  யானை ஊர்வலம் பிடாரி ஆண் பெண் வலம் வரும் பத்து முறை சாமிக்கு பூ கொட்டும் பொம்மை .
ஒவ்வொரு தடவையும் மூன்று முறை ஏமாற்றி பிறகே பூ கொட்டும்.. குழந்தை முதல் பெரியோர் வரை கை தட்டி கொண்டாடுவோம் அந்த அழகை ரசிக்காதவர் யாருமில்லை எங்க ஊரில்.. பள்ளி விடுமுறை வேற இந்த நேரத்தில் ஆகா ஓஓ என்று கொண்டாடுவோம்..
இந்த நிலவு வந்தது இருந்தும் மகிழ்வில்லை லட்சகணக்கில் கிரிவல மக்களில்லாமல் ஊரே வெரிச்சோடி காண்பது வேதனையே ..
திருவிழா காணாத நாள் காலத்தால் கலங்கமாக கல்லில் பொறிக்கப்பட்டு விடும்.  
நோய் தொற்று தினம்தோறும் அதிகரித்து பீதியை கிளப்புகிறது. தனித்திரு.  விழித்திரு. என்பது போக கூடிடு ..குடித்திரு.. என்று விடியுமோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.. நோய் கொண்டு போகுமுன்னே மது கொண்டு போகுமோ மக்களை .. மக்களை ஆள மாக்கள் அரசால் கிறதோ என்றும் ஐயம் ஏற்படுகிறது.. 
எதை புலம்பி ஆவதென்ன நம் திருவிழா நம்ம வீட்டு தோட்டத்து செடிகளின் இடையேமின்னும் தங்க நிலாவிடம் விளையாடுவோம். வாங்க

சோணாச்சலகிரிக்கு நிலவு கிரீடம் சூடிய போது

நிலவு எனக்கு நெற்றி திலமாகிறது ..காணீரோ..அழகெல்லாம் நிலவேே அள்ளிக் கொண்டதோ என்று தோனுகிறது..நானும் நிலவும் நடுநிசியிலும் காயா பழமாா விளையாடிய போது..

2 comments:

  1. ஆளுகிறவர்கள் மாக்கள் அல்ல மக்கள்தான் மாக்கள் இன்றுமுதல் தமிழகத்தில் எல்லாம் தொடரும்...

    ReplyDelete