Tuesday 5 May 2020

தொலைந்த இன்பம் நிறைந்த வரமாகும்

எப்படி எதை தேடுகிறேன் எதை தொலைத்தேன்.. எங்கே தேடுகிறேன். 


என்ற என் ஆயிரம் கேள்வி தங்க தகடாக தகதகட்டும் வளர்ந்த முழு பௌர்ணமி நிலவில் நிலவோடு அளவளாவி  நீண்ட நேரம் அகமகிழ்ந்தும் அன்பு பொழிந்தும் வம்பிட்டும் வாதிட்டும் கேட்கிறேன்..
படிக்கும் நீங்க நீ என்ன லூசா என்ற மைன்ட் வாய்ஸ் கேட்கிறது..

நிலவில் கால் வைத்தவரின் பெருமையை பறைசாற்றும் யாவரும் என் நீண்ட உரையாடலை கிண்டல் செய்ய மாட்டீர்கள்.

பிறந்த சில மாதம்  முதலே அம்மா இரவில் பால் சோறு ஊட்டும் போது நிலவை பற்றி சொன்ன கதையிலிருந்து நிலாவும் எனக்கு  நல்ல தோழியே நான் வளர்ந்தாலும் அந்த நிலா மட்டும் அப்படியே தேய்ந்து தேய்ந்து மீண்டும் வளர்கிறது..

 தன் இளமையில் கலங்கமில்லாமல் பல காதலருக்கு தூது செல்கிறது.. கவிதைக்கு பொருளாக துணைபுரிகிறது..

உன்னிடம் மட்டுமே சாதி மதமற்று அனைவரும் நேசிக்கின்றனர். நீ ஏழைகளின் கூரைவீட்டு கீரிடம் நீ..
ஆம் என் வீட்டு தங்க தட்டு நீதான்..
எதை தேடினேன் உன்னிடம் கேட்டகேள்வியை மறந்து போகுமளவில் கருத்தில் புகுந்து சிந்தனையை களவாடும் கள்ளி நீ..

என் இளமை களவு போனதை தேடவா மழலையை தொலைத்தேன் அதை தேடவா பௌர்ணமி நிலவொளியில் அப்பா கரம் பிடித்து கிரிவலம் வரும் அந்த அற்புத நாட்கள் நிலையான நிஜங்கள் கானல்நீராக இப்போது. காலனிடம் கைப்பற்றி கடந்து பிரிந்து சென்றார். உலகை வென்று விட்டார்.  அப்பாவும்.. 

இப்போதைய இந்த இக்கட்டான சூழலில் நிலவும் சுடுமோ நோய் தொற்று கிருமியை பொசிக்கிட உன் தகதகக்கும் பிரகாசிக்கும் அழகால் வெல்ல வழி சொல்லேன்.. தங்க நிலவே.. மீண்டும் பேசுவோம்.. புதிய ஆரோக்கிய உலகை வெல்வோம்.
என் விரல் மோதிரத்தில் மின்னும் கல்லாக வெண்ணிலவே நீஎன் கை பிடீயில் வந்து விளையாட அழைைத்தாயே அப்போோது என் விரலில் வந்து வெற்றி சின்னத்திற்கு வாகை சூடியபோது..

4 comments:

  1. நிலவோடு தொடர்ந்து பேசுங்கள் மனம் புத்தொளி பெறும்.

    படங்கள் அருமை

    ReplyDelete
  2. ஆகா...! படங்கள் எடுத்த சிந்தனைகளும் அருமை...

    ReplyDelete