Sunday 10 May 2020

இரமணரும் அவர் தாயாரும்

பெற்ற  அன்னைக்கு    மோட்சம்   அளித்த  மகன்

          அன்னை    அழகம்மை   தன் மகன்  ரமணருடன்    கடைசிக் காலத்தில்   சுமார்   ஆறு
வருடங்கள்   தங்கியிருந்தார் . தன்  மகன்  மடியிலே
உயிர்  விடவேண்டும்   என்ற   ஆசைப்பட்டாள் .
பகவானை   விட்டு   வெளியில்  எங்காவது   சென்று   அங்கேயே   உயிர்   பிரிந்து விடுமோ
என்று   அச்சம்   அடைந்தாள் . அதனால்  மகனை
விட்டு   எங்கும்   செல்வது   இல்லை .

              1922  மே  மாதம்   அழகம்மையாரின்  உடல்
நிலைமை   கவலைக்கிடமானது . பகவான்  தன்
தாயின்   அருகிலேயே  அமர்ந்திருந்தார். அப்போது
தனது   வலது  கரத்தை   அன்னையின்   வலது
புறத்தில்   ஆன்மீக ஹ்ருதய   ஸ்தானத்தின்  மேலும்   இடது   கரத்தை   உச்சந்தலையின்   மீதும்
வைத்திருந்தார் .  அதாவது  அவள்   மூச்சு வாங்க  ஆரம்பித்த   முதல்   பிராணன்   போய்   சில வினாடிகள்   ஆகும் வரை    காலை  எட்டு  மணி
முதல்   இரவு   எட்டு மணி  வரை   தன்  தாயை
விட்டு  அகலாமல்   கைகளையும்   எடுக்காமல்
அமர்ந்திருந்தார் .  அச்சமயம்   பக்தர்கள்
அருணாசல  அட்சரமணமாலை   பாராயணம்
செய்தனர் .

   திரண்டு   எழும்பிய  கடந்த  பல   ஜென்மங்களின்  பூர்வ  வாசனைகள்   வெளியே   செல்லாமல்   ஆன்ம  ஹிருதயத்தில்  அடங்கி   ஒடுங்குவதற்காகத்தான்   இப்படி  கையை  வைத்திருந்தார் .  எண்ணங்கள்   உதித்த  இடத்தில்
ஒடுங்கினால்தான்   முக்தி .  தாயின்   ஜென்ம
வாசனைகள்  மகனால்  அழிக்கப்பட்டு விட்டது .
மஹா சாந்தத்தில்   மஹாசமாதி  பெற்றுவிட்டது .

     அம்மாவின்   மூச்சு   அடங்கியபின்  அவளுடைய
முகம்   ஒரு   தெய்வீக   ஒளியுடன்  பிரகாசித்தது .
உயிரற்ற பிணம்   போலில்லாமல்  தியானத்தில்
இருக்கும்  யோகினியைப்  போல்  விளங்கியது .
அவள்   மரணமடைந்த   வினாடியில்  உலோகத்தை
போன்ற   ஒரு  சப்தம்   கேட்டது .

         தீட்டு    ஒன்றும்   இல்லை ,  அனைவரும்
சாப்பிடலாம்   என்றார் .  பின்   பக்தர்கள்
அனைவருடன்   பகவானும்   உணவருந்தினார் .

         ஞானத்தில்   ஆண் ,  பெண்  பேதமில்லை .
பின்னர்     அன்னைக்கு   சமாதி   வைப்பது
என்று   முடிவு செய்யப்பட்டது .

4 comments:

  1. அறியாத அரிய புராணக்கதை அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  2. மோட்சம் எல்லாம் குறள்களில் இல்லை...

    ReplyDelete