Thursday 28 May 2020

காசி யாத்திரை

#காசியாத்தைரை1 அவங்க  அவங்க டூர் போனால் ஜாலியா லோக்கேஷன் முதல் போட்டோவரை போட்டு கலக்குறாங்க.. என்னதான் டிக்கட் புக் செய்து போனாலும் இந்த இந்திகார பிள்ளைகள் ஆக்கிரமிப்பு தாங்க முடியல..நாமும் போட்டோ போடலாம் என்றால் இந்த இரயில் சார்ச் போட இடமும் இல்ல நிக்க கூட முடியல கழிவறை வரை லைன் போகுது 21முதல் இந்த நாள் வரை பயணம் புனித யாத்திரை காசி காயா அலகாபாத் ஆனந்த பயணம் இருபது பேரும் குடும்ப உறுப்பினர்களே. அன்பும் பரிவு அதிகரித்து இன்னும் புரிதலும் விட்டுதருதலும் வளர்ந்து அன்பு அன்பு பெருகி மகிழ்ச்சி பன்மடங்கு வளரவே இது போன்ற டூர் மிக அவசியம் தேவையாகிறது.இன்னும் நிறைய கதை சுவாரசியம் சோகம் பிறகு பகிர்கிறேன் நன்றி.

கயா, திருவேணிசங்கம்,  காசி  பயணக்  கட்டுரை.

  எங்களது  8 நாட்கள் பயணம்
21. முதல் 28. வரை.

முதல் நாள்   காலை கயா விரைவு ரயிலில் , சென்னை எக்மோரிலிருந்து  கயாவிற்கு  திருவண்ணாமலை பயணம் 49 நபர்களுடன் பயணம் இனிதே துவங்கியது.

22.ரயில் பயணம் இரவு.

23.அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம் சென்று  புத்த கயாவில் உள்ள  விடுதியில் தங்கல்.

23.காலை  பஸ் மூலம் 10 கி.மீ வந்து
கயா லக்ஷ்மி நாராயண விஷ்ணு பாத கோயிலில் தர்ப்பணம்,
சாட்சி ஆலமரம்.
 புத்த கயாவில் உள்ள புத்தர் கோயில்கள்  மற்றும் போதி மரம் தரிசனம்.

23.இரவு  கயாவிலிருந்து அலகாபாத் ரயில் பயணம்.

 24 அலகாபாத் வந்து விடுதியில் தங்கல்.
 ஸ்ரீசங்கர மடத்தின், வடக்கு நோக்கிய பிள்ளையார், காமாட்சி, துர்கை , பெருமாள், சகஸ்ரலிங்கம் தரிசனம்.

திருவேணி சங்கம் காலை யமுனை நதியில் படகில் சென்று கங்கை நதியில் நீராடல். திரும்பி படகில் வரும்போது யமுனை நதியில்  தீர்த்தம் எடுத்தல்.
 நான்கு  யுகம் முன்  தோன்றிய ஆலமர விழுது.
மாலை. நேரு வீடு, ஆனந்த பவனம்,  இந்திரா காந்தி இல்லம் ஸ்வராஜ்பவனம் , பார்வையிடுதல்.

24.இரவு அலகாபாத்திலிருந்து பஸ் மூலம் வாரனாசி வந்து சோனாபூர் கௌரியா விடுதியில்  வந்து தங்கல்.

25.காலை கௌரியா விடுதியிலிருந்து ஆஞ்சனேயா காட் வழியாக படகு  மூலம் நபருக்கு ரூ.100/ வீதம்49பேர் கிளம்பி விதிவசத்தால் ஒருவர் இறைவனடி சேர்ந்து  48 பேர் ஒரே படகில்  சென்று ஹரிச்சந்திர காட் ( காட் என்றால் மயானம்) , முதல் மணிகர்ணிகா காட் வரை உள்ள 48 கட்டிடங்கள் படித்துறையில் படகில் இருந்து பார்த்தல்.
பின்னர் அக்கறை சென்று  5 அடி ஆழமுள்ள  வாரனாசி கங்கை நதியில் நீராடல்.
காசி விஸ்வநாதர்,  அன்னபூரனி, பார்வதி, ஆதி காசி விசாலாட்சி  ஸ்ரீநரசிம்மர் தரிசனம்.

மீண்டும் மாலை படகில் சென்று கங்கா ஆரத்தி 6-8 மணி வரை தரிசனம்.

26.சோழி மாதா, பாதாள ஆஞ்சனேயர், கிருஷ்ணன் கோயில், ஆஞ்சனேயர் கோயில்.
பைரவர் கோயில்,
காளி கோயில்.
தீர்த்தம் பொருட்கள் வாங்கல்.
26.இரவு ரயில் பயணம்
27.ரயில் பயணம்.
சென்னை வந்து சேர்ந்தது.
(குறிப்பு. டூர் ஏஜன்ட் வராத நேரத்தில் இரண்டு நாள் திரு. தனசேகரன் வழி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
திருவண்ணாமலை டூர் ஏஜென்ட் ஒவ்வொரு இடத்திலும் உள்ள கடவுள், கோயில் தளங்களில் ஐதீகம் மற்றும் வரலாறு பற்றி உடனிருந்து அழகாக விவரித்ததும் உணவு வழங்கியதும்  மிகவும் சிறப்பு.)
சசிகலா தனசேகரன்
திருவண்ணாமலை.
28.5.2019.

2 comments:

  1. அடுத்து ராமேஸ்வரம் தானே...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இன்னும் இரண்டு தொடர் வரும்

      Delete