Thursday 14 May 2020

ஆ.உராய்வுக் கல்

"ஆ உராய்வுக்கல்"

ஆவுரைச்சிக்கல்
ஆவுரஞ்சிக்கல்
ஆதீண்டுகுற்றி எனப் பல பெயர்களில், சங்ககாலம் முதல் பகுதிக்கேற்றுவாறு அழைக்கப்படுகிறது.

"ஆ" - எனும் செல், இலக்கியங்களில் பசுக்களை பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. இவ்வாறு மாடு உராய்வும்கல்லே, ஆ ஓஞ்சிக்கல்லு, ஆ உறிஞ்சிக்கல்லு என அழைக்கப்படுகிறது.

உருளைவடிவிலான நீண்ட கற்கள், உயரமான கல்தூண், மரக்கட்டைகளை, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் முடிந்து திரும்பிவரும் பாதைகளில், நீர் அருந்தும் குளங்களில், தெருவோரங்களில் அமைக்கப்படும் நீா்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். மாடுகள் தண்ணீர் குடித்த பிறகு, அதன் உடலில் ஏற்படும் தினவை (அரிப்பை) தவிர்க்க ஆவுரைச்சிக்கல்லில் தமது உடம்பைத் தேய்த்துக்கொள்ளும்.

இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சங்ககாலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்.

இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன.

4 comments:

  1. எப்படியெல்லாம் இருந்திருக்கிறது... வியப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  2. வியப்பான தகவல்கள் ஐந்தறிவு ஜீவிகளையும் மதித்து முன்னோர் செய்த திட்டங்கள் அளப்பெரிது.

    ReplyDelete